இந்திய ஓபன் பேட்மிண்டன் 2024 இறுதிப் போட்டியில் சாத்விக் சிராஜ் ராங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி அதிர்ச்சி தோல்வி
கடந்த 16 ஆம் தேதி முதல் டெல்லியில் இந்திய ஓபன் பேட்மிண்டன் 2024 நடைபெற்றது. , நடந்த ஆண்களுக்கு பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சிராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடியானது, தென் கொரியாவின் காங் மின் ஹியுக் மற்றும் சியோ செயுங் ஜே ஜோடியை எதிர்கொண்டது.
சாத்விக் சிராஜ் ஜோடியானது முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், 2ஆவது செட்டை 11-21 என்று இழந்தது. கடைசி செட்டை 21-18 என்று தென் கொரியா ஜோடி கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதன் மூலமாக சாத்விக் சிராஜ் ஜோடியானது 2ஆவது இடம் பிடித்தது.