சோகம்… நேற்று திருமண நிச்சயதார்த்தம் … இன்று கடலில் மூழ்கி மணமகன் பலி… மணமகள் கவலைக்கிடம்.. !

இவருக்கும் கும்பகோணம் செக்கடித்தெருவில் வசித்து வரும் நிவேதாவுக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இன்று காலை இருவீட்டாரின் உறவினர்கள் 25பேர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு சுற்றுலா சென்றனர். பிற்பகல் அனைவரும் தரங்கம்பாடி கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென வந்த ராட்சஸ அலையில் நவீன்குமார், நிவேதா மற்றும் சரவணன் என்ற 6 வகுப்பு படிக்கும் சிறுவன் ஆகியோர் அலையில் சிக்கி அலறி கூச்சலிட்டனர். இந்த அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கடலில் இறங்கி உயிருக்குப் போராடியவர்களை மீட்டனர். நிவேதா மயக்கமடைந்து விட்டார். நவீன்குமார் மற்றும் சரவணன் இருவரும் உயிரிழந்துவிட்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை இருவரது உடல்களையும் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் நிவேதாவை நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்து ஒருநாள் திரும்புவதற்குள் புதுமாப்பிள்ளை மற்றும் 6ம் வகுப்பு படித்துவந்த சரவணனும் உயிரிழந்தது கும்பகோணம் பகுதியில் அவரது உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.