சாய்பாபா அற்புதங்கள் : எதிர்ப்பார்க்காத தொலைப்பேசி
அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவன அதிபர். தன் தொழில் நிமித்தமாக அடிக்கடி பல்வேறு நாடுகளுக்கு பறந்து கொண்டிருப்பவர்.
அப்படித்தான் ஒருமுறை ஆஸ்திரேலிய சென்றிருந்தார். அங்கு அழகுசாதனப் பொருட்கள் விற்பனையில், பெரிய ஏஜென்டான, ராஜீவ் நானயக்கராவைச் சந்தித்துத் தன் அழகு சாதனப் பொருட்களுக்கு ஆர்டர் எடுக்கக் முயற்சி எடுத்தார். அந்த ஆர்டர் கிடைத்து விட்டால், அங்கு பெருமளவில், விரிவடைந்துவிடும்.
ஆனால், ராஜீவ், இவரது அழகுச் சாதனப் பொருளில் இன்னும் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். மேலும், ஒரு சில தினங்களில் தொலைப்பேசி மூலம் தனது ஆர்டரைக் கொடுப்பதாகவும் கூறி கோபால கிருஷ்ணனை அனுப்பி வைத்தார்.
ஆயிற்று, ஒன்றல, இரண்டல்ல, மேலும் சில மாதங்கள் ஓடிற்று. ராஜீவிடம் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை.
இது கோபாலகிருஷ்ணனுக்கு பெரும் கவலையை அளித்தது. இதனால், ஆஸ்திரேலியாவில், அவரது வணிக பெருக்கத்திற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஒருநாள் சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, குறுக்கிட்ட சிக்னலில் இவரது கார் நின்று கொண்டிருந்தது.
“ராஜீவ் ஏன் தொடர்புக்கொள்ளவில்லை?” என்ற கவலை இவர் மனதில் அழுத்தமாக ஓடியது. திடீரென்று சாய்பாபாவிடம் இது பற்றி பிராத்தனை செய்தால் நல்லது என்றும், அவருக்கு தோன்றியது காரில் இருந்தவாறே தன்னிடம் இருந்த சாய்பாபாவின் படத்தை எடுத்து அவரையே பார்த்தவாறு, தன் கவலையை வெளிப்படுத்தினார்.
ஒரு சில நொடிப்பொழுதில் சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது. இவர் காரை ஓட்டுனர் செலுத்த தொடங்கினார். அதே சமயம் இவரது தொலைபேசி மணியடித்து விளக்கு எரிந்தது. எடுத்து பார்த்தார். ராஜீவ் என்ற பெயர் மின்னியது.
சந்தோஷ அதிர்ச்சியாய் அதனை எடுத்து தனது காதில் பொருத்தினார்.
“கோபாலகிருஷ்ணன் எப்படி இருக்கிறீர்கள்?” என்று நலம் விசாரித்தார் ராஜீவ்.
நன்றாக இருப்பதாய் பதில் சொன்னார் கோபாலகிருஷ்ணன்.
உங்களது அழகு சாதனப் பொருட்கள் எனக்கு உடனே தேவைப்படுகிறது. அனுப்பி வையுங்கள். அதில் நான் ஏற்கனவே கூறி இருந்த மாற்றங்களைப் பற்றி கவலை பட வேண்டாம். நீங்கள் காண்பித்த அதே அழகு சாதனப் பொருட்களையே அனுப்புங்கள்” என்றார் ராஜீவ். கோபாலகிருஷ்ணனுக்கு சற்று நேரம் ஏதும் புரியவில்லை. ஆகாயத்தில் பறப்பது போன்ற வரு மகிழ்ச்சி. தான் எதிர் பார்த்ததற்கும் மேலாகவே ஆர்டர் கிடைத்தது. அவர் தொழில் மேலும் வளமடைந்தது.