லியோ, ஜவான் படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளிய சலார்… இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

பிரபாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சலார் திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப் படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.178.70 கோடி அளவுக்கு வசூலித்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் முதல் நாளில் அதிக தொகையை வசூலித்த இந்திய படம் என்ற சாதனையை சலார் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் விஜய் நடித்த லியோ மற்றும் ஷாருக்கானின் ஜவான் படங்களின் ரெக்கார்டுகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக சினிமா வர்த்தக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கே.ஜி.எஃப் 1, 2 படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் சலார் படத்தை இயக்கி இருப்பதால் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது. செப்டம்பர் மாதம் வெளிய வேண்டிய வெளிவர வேண்டிய இந்த திரைப்படம் கிராபிக்ஸ் வேலைகள் காரணமாக டிசம்பர் 22ஆம் தேதியான நேற்று வெளியானது. அதற்கு முந்தைய நாளில் மற்றொரு எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ஷாருக்கான் நடித்த டங்கி ரிலீஸ் ஆனது.

இதனால் சலார் திரைப்படத்திற்கு வட மாநிலங்களில் போதிய அளவு திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் வெளிநாடுகளில் டங்கியை விடவும் சலார் படத்திற்கு அதிக வரவேற்பு இருந்ததால் திரையரங்குகள் அதிகம் கிடைத்தன. இதே போன்று தமிழ்நாட்டிலும் கணிசமான அளவு ரசிகர்கள் நேற்று சலார் படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

ஏற்கனவே பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த கேஜிஎப் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருந்தது கவனிக்கத்தக்கது. விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூபாய் 148.5 கோடி வசூலித்திருந்தது ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் முதல் நாளில் 129.6 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *