சம்பள கணக்கு சேமிப்பு கணக்காக மாறிவிட்டதா?
ஒரு ஊழியர் வேலை பார்க்கும் போது அவர்களுக்கான சம்பளம் சம்பள கணக்கில் தான் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பளக் கணக்கு சாதாரண சேமிப்பு கணக்கு போல் இருந்தாலும் அதில் பல வகையான வசதிகள் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது, மற்ற சேமிப்பு கணக்குகளில் நீங்கள் குறைந்தபட்ச பேலன்ஸ் மெயின்டன் செய்ய வேண்டும்.
ஆனால், சம்பளக் கணக்கை பொறுத்தவரையிலும் ஜீரோ பேலன்ஸ் வைத்திருந்தாலும் உங்களுக்கு வங்கியின் சார்பில் அபராதம் விதிக்கப்படாது. ஆனால், தொடர்ந்து மூன்று மாதங்கள் உங்களது சம்பள கணக்கில் சம்பளம் வரவில்லை எனில் உங்களது சம்பளக் கணக்கு சாதாரண சேமிப்புக் கணக்காக மாறிவிடும். இவ்வாறு, உங்களது சம்பள கணக்கு சேமிப்பு கணக்காக மாறும் பட்சத்தில் நீங்கள் கட்டாயமாக குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டும்.