2024 பிப்ரவரியில் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்த பயணிகள் வாகன விற்பனை..!
பிப்ரவரி 2024-ல் இந்திய பயணிகள் வாகனப் பிரிவு நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி 2024-ல் OEM-க்களிடமிருந்து, டீலர்ஷிப்களுக்கு நான்குசக்கர வாகன தொழில்துறை இதுவரை இல்லாத மூன்றாவது அதிகபட்ச monthly despatches-களை பதிவு செய்திருக்கிறது. கடந்த ஆண்டு (2023) பிப்ரவரியில் 3,35,324 யூனிட்ஸ் கார்கள் விற்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு (2024)2024 பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 3,73,177 யூனிட்ஸ்களாக அதிகரித்து உள்நாட்டு சந்தையில் பேஸஞ்சர் வெஹிகிள்களின் ஆண்டுக்கு ஆண்டு (y-o-y) வளர்ச்சி 11.3%-ஆக அதிகரித்து உள்ளது.
பிப்ரவரி 2023-ல் PV விற்பனையானது இதுவரை இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாத விற்பனை அளவைக் கண்டிருந்தாலும், அந்த சாதனையை உடைத்து நடப்பாண்டு (2024) பிப்ரவரி PV விற்பனையானது புதிய சாதனையை படைத்து உள்ளது. எனினும் PV டீலர்களின் டெஸ்பேட்ச்ஸ்கள் ஜனவரி 2024-ல் 3,94,500 யூனிட்ஸ்களாகவும், அக்டோபர் 2023-ல் 391,811 யூனிட்ஸ்களாகவும் உள்ளதை ஒப்பிடும்போது பிப்ரவரி 2024 PV விற்பனை பின்தங்கியே உள்ளது.
SUV எனப்படும் ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனங்களுக்கான வலுவான தேவை மற்றும் விநியோகம் மேம்பட்டுள்ளதன் தொடர்ச்சியாக இந்தியாவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை மிக அதிகமாக இருந்தாக தொழித்துறையினர் கூறுகின்றனர்.
பிப்ரவரி 2024-ல் மொத்த விற்பனையை விட சில்லறை விற்பனை (retail sales) குறைவாக இருந்தபோதிலும், கடந்த ஆண்டு இதே மாதத்தில் 3,01,900 யூனிட்ஸ்களாக இருந்த நிலையில், இந்த மாதத்தில் 11.3% அதிகமாகி சுமார் 3,35,900 யூனிட்ஸ்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 2024-ல் 1,60,271 யூனிட்ஸ்கள் விற்பனையுடன் மாருதி சுசுகி மீண்டும் முன்னணியில் உள்ளது. பிப்ரவரி 2023-ல் 1,47,467 யூனிட்ஸ் வாகனங்களை மட்டுமே விற்றிருந்த நிலையில் இந்த பிப்ரவரியில் 1,60,271 யூனிட்ஸ்களை விற்று year-on-year விற்பனையில் 8.7% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பிப்ரவரி 2024-ல் மாதாந்திர PV மொத்த விற்பனையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவை விட அதிக கார்களை விற்று டாடா மோட்டார்ஸ் மீண்டும் முன்னணியில் உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 42,862 யூனிட்ஸ்களை மட்டுமே விற்பனை செய்திருந்ததை ஒப்பிடுகையில் yoy-ல் 19.6% வளர்ச்சியை 51,267 யூனிட்ஸ்களை விற்று பதிவு செய்து இருக்கிறது. அதே நேரம் தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் 47,001 யூனிட்ஸ்களை விற்றிருந்த நிலையில், இந்த பிப்ரவரியில் 50,201 யூனிட்ஸ்களை விற்று yoy-ல் 6.8% அதிகரிப்பை பதிவு செய்து இருக்கிறது.
பிப்ரவரி 2023-ல் 30,358 PV யூனிட்ஸ்களை மட்டுமே விற்பனை செய்திருந்த மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், 2024 பிப்ரவரியில் 42,401 யூனிட்ஸ்களை விற்பனை செய்து 39.7% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. பிப்ரவரி 2024-ல் டொயோட்டா நிறுவனம் 23,300 வாகனங்களை விற்பனை செய்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் பிப்ரவரி 2023-ல் 15,338 வாகனங்களை மட்டுமே விற்றிருந்த நிலையில் தற்போது 51.9% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.