சல்யூட் டூ கேப்டன்… லியோ… ஜவான் : சின்னத்திரையில் முன்னணி நடிகர்களின் பொங்கல் படங்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்கள் தியேட்டர்களில் வெளியாவதை போல், சின்னத்திரையிலும், அன்மையில் வெளியான திரைப்படங்களை ஒளிபரப்புவது வழக்கமான ஒன்று. அதிலும் தற்போது இணையதள வசதி அதிகரித்துள்ள இன்றைய காலக்கட்டத்தில் ஒரு படம் வெளியான ஒரு மாதத்தில் ஒடிடி தளத்தில் வெளியாகி விடும் நிலையில், அடுத்து வரும் பண்டிகை நாட்களில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவிடுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு, விஜய், ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளது. அதன்படி, ஜீ தமிழில் இந்த வருட பொங்கலுக்கு போகி பண்டிகை நாளிலிருந்தே சிறப்பு திரைப்படத்துடன் கொண்டாட்டத்தை தொடங்க உள்ளது ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை அன்று மதியம் 3.30 மணிக்கு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்து சூப்பர் ஹிட்டான ஜவான் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி தைத்திருநாள் அன்று காலை 8:30 மணி முதல் பத்து மணி வரை சுகி சிவம் தலைமையில் நமது குடும்ப அமைப்பில் பெரும் மாற்றங்கள் தேவை, தேவையில்லை என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. அதன்பிறகு காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவு கூறும் வகையில் திரளான பிரபலங்கள் பங்கேற்கும் சல்யூட் டூ கேப்டன் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
நல்ல மனிதராக நடிகனாக, நண்பனாக, வழிகாட்டியாக, தலைவனாக, என ஒவ்வொரு விதத்திலும் விஜயகாந்த்தின் குணத்தை பற்றி பிரபலங்கள் அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்தின் இரண்டு மகன்களும் பங்கேற்க இருக்கின்றனர். அடுத்து மதியம் 12:30 மணி முதல் 4:00 மணி வரை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து கலக்கிய மெகா ஹிட் சூப்பர் திரைப்படமான மார்க் ஆண்டனியின் டெலிவிஷன் பிரிமியர் ஒளிபரப்பாக உள்ளது.
பிறகு மதியம் 4:00 மணி முதல் 7 மணி வரை ஆர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. மறுநாள் மாட்டுப் பொங்கல் தினமான ஜனவரி 16ம் தேதி காலை 8:30 மணிக்கு சுகி சிவம் தலைமையில் கிராமங்கள் நகரங்களாவது கொடையா? கொடுமையா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.
தொடர்ந்து காலை 10 மணி முதல் 12:30 மணி வரை சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 3-ன் வெற்றி கொண்டாட்டம் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் மதியம் 12:30 மணி முதல் 4.00 மணி வரை ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வீரன் படத்தின் டெலிவிஷன் பிரிமியர் ஒளிபரப்பாக உள்ளது. மதியம் 4 மணி முதல் 7 மணி வரை ஜில்லுனு ஒரு காதல் ஒபெலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து கலக்கிய பத்து தல திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சன் டிவியில் ஜனவரி 15-ந் தேதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாக லியோ படம் ஒளிபரபாகிறது. ஜனவரி 16-ந் தேதி சமீபத்தில் தீபாவளி தினத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒளிபரப்பாக உள்ளது. எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கலைஞர் டிவியில், ஜனவரி 15-ந் தேதி அருள் நிதி நடித்த கழுவேத்தி மூர்கன் திரைப்படும், ஜனவரி 16-ந் தேதி, ஜெயம்ரவி நடித்த இறைவன் படமும் ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் டிவியில் ஜனவரி 14-ந் தேதி சரத்குமார் நடித்த பரம்பொருள் படமும், ஜனவரி 15-ந் தேதி யோகிபாபுவின் லக்கிமேன் படமும், உதயநிதி நடித்த மாமன்னன், சரத்குமார் அசோக் செல்வன் நடித்த போர்தொழில் படமும் ஒளிபரப்பாக உள்ளது. அடுத்து ஜனவரி 16-ந் தேதி விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2, மணிகண்டன் நடித்த குட் நைட் ஆகிய படங்கள் ஒளிபரப்பாக உள்ளது.