”ஓரினச்சேர்க்கை”.. நண்பரை திருமணம் செய்து கொண்ட ”சாட் ஜிபிடி” நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன்!
வாஷிங்டன்: சாட் ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவான சாம் ஆல்ட்மேன் இன்று தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டார்.
சாம் ஆல்ட்மேன் ஓரினச்சேர்க்கையாளர் என கூறப்படும் நிலையில் அவர் திருமணம் செய்து கொண்ட நபரின் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது தொழில்நுட்பம் என்பது தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனும் ஏஐ தொழில்நுட்பம் தான் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தான் ஓபன் ஏஐ நிறுவனம் கண்டுபிடித்த ‘சாட்ஜிபிடி’ மக்களின் வேலையை பறிக்கும் அளவுக்கும் உள்ளது.
இந்த ‘சாட் ஜிபிடி’ செயற்கை நுண்ணறிவை உருவாக்கிய நிறுவனம் தான் ஓபன் ஏஐ. இந்த நிறுவனத்தின் சிஇஓவாக சாம் ஆல்ட்மேன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் அந்த பொறுப்பில் சேர்த்து நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான் சாம் ஆல்ட்மேன் நேற்று திருமணம் செய்து கொண்டார். ஓரினச்சேர்க்கையாளராக அவர் தன்னை அடையாளப்படுத்தி வந்த நிலையில் அவர் தனது நண்பர் ஆலிவர் முல்ஹெரினை கரம் பிடித்துள்ளார். இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். ஹவாயில் இந்த திருமண விழா மிகவும் எளிமையான முறையில் நடந்தது. இதில் சாம் ஆல்ட்மேனின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.