Samantha – கணவரை பிரிந்த உங்களின் அறிவுரை தேவையில்லை.. சமந்தாவை விளாசிய ரசிகர்.. அவர் ரியாக்‌ஷன் இதுதான்

சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது.

 

இதனையடுத்து சமந்தா தன்னுடைய கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்து அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்த அவர் குட்டி பிரேக் எடுத்தார். தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்புவதாக சமீபத்தில்தான் அவர் அறிவித்திருந்தார்.

முன்னணி நடிகையான சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் தீவிரம் காட்டி வந்தார் சமந்தா.

ஆனால் திடீரென கடந்த 2021ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் பிரிகிறோம் என்று நாக சைதன்யாவும், சமந்தாவும் சமூக வலைதளத்தில் அறிவித்தனர். அதற்கான காரணங்களாக பல யூகங்கள் சொல்லப்படுகின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *