விவாகரத்துக்கு பின் ஒரே மேடையில் சமந்தா – நாக சைதன்யா! வீடியோவுடன் இதோ
நடிகை சமந்தா மற்றும் நாகா சைதன்யாவை காதல் திருமணம் செய்து நான்கு வருடங்களில் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். 2021ல் அவர்கள் டைவர்ஸ் பற்றிய செய்தி ரசிகர்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சியைஏற்படுத்தியது.
அவர்கள் இருவருக்கும் நடுவில் என்ன பிரச்சனை என்பதை வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் கூட அவர்கள் ஒன்றாக கலந்துகொள்ளவில்லை.
ஒரே நிகழ்ச்சியில் சமந்தா – நாக சைதன்யா
அமேசான் ப்ரைம் நிறுவனம் தற்போது 2024ல் அடுத்து வர இருக்கும் ஷோக்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
அதில் சமந்தா நடிக்கும் Citatel Honey Bunny சீரிஸ் மற்றும் நாக சைதன்யா நடிக்கும் Dhootha என்ற தெலுங்கு வெப் சீரிஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அறிமுகப்படுதப்பட்டன.
சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் ஒரே நேரத்தில் மேடையில் இருக்கவில்லை. அவர்களது வீடியோ இதோ..