சாம்சங்கின் Galaxy S24 சீரிஸ் மொபைல்களில் விலை விவரங்கள் அறிவிப்பு… எப்போது முதல் விற்பனை?

ஃபிளாக்ஷிப் பிரீமியம் ஸ்மார்ட் ஃபோன்களை வாங்கி பயன்படுத்தும் யூஸர்கள் மிக ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்த சாம்சங்கின் Galaxy S24 சீரிஸ் மொபைல்களின் விலை மற்றும் இந்தியாவில் எப்போது முதல் இந்த மொபைல்கள் கிடைக்கும் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சாம்சங் நிறுவனம் தனது இந்த புதிய சீரிஸில் பேஸ் மாடலான Galaxy S24, Galaxy S24+ மற்றும் டாப் ஸ்பெக் மாடலான Galaxy S24 Ultra என மொத்தம் மூன்று மொபைல்களை அறிமுகப்படுத்துகிறது. இவற்றின் விலை விவரங்களை கீழே பார்க்கலாம்…

Galaxy S24 Ultra:

சாம்சங்கின் கேலக்ஸி 12 சீரிஸில் டாப் மாடலாக இருக்கும் Galaxy S24 Ultra மொபைலின் பேஸ் மாடல் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ.1,29,999 ஆகும். இந்த மொபைல் மாடல் 12GB ரேம் + 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 1 TB வேரியன்ட்ஸ்களிலும் வர உள்ளது. இவற்றின் விலைகள் முறையே ரூ.1,39,999 மற்றும் ரூ.1,59,999 ஆகும். இந்த மொபைலின் மற்ற 2 வேரியன்ட்ஸ்கள் டைட்டானியம் கிரே, டைட்டானியம் வயலட் மற்றும் டைட்டானியம் பிளாக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் அதே நேரம் 1TB வேரியன்ட் டைட்டானியம் கிரே கலரில் மட்டுமே கிடைக்கும்.

Galaxy S24 Plus:

இந்த சீரிஸில் இடம்பெற்றுள்ள Galaxy S24 Plus மொபைலானது 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என 2 வேரியன்ட்ஸ்களில் வர உள்ளது. இதன் விலைகள் முறையே ரூ.99,999 மற்றும் ரூ.1,09,999 ஆகும். கோபால்ட் வயலட் மற்றும் ஓனிக்ஸ் பிளாக் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் Galaxy S24 Plus மொபைல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Galaxy S24:

இந்த சீரிஸில் பேஸ் மாடலாகவும் மற்றும் விலை குறைவாகவும் இருப்பது Galaxy S24 ஆகும். இது 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8GB ரேம் + 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என 2 வேரியன்ட்ஸ்களை கொண்டுள்ளது. இவற்றின் விலைகள் முறையே ரூ.79,999 மற்றும் ரூ.89,999 ஆகும். இது ஆம்பர் எல்லோ, கோபால்ட் வயலட் மற்றும் ஓனிக்ஸ் பிளாக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் வர உள்ளது.

Galaxy S24 சீரிஸிற்கான ப்ரீ-புக்கிங்:

Galaxy S24 சீரிஸின் ப்ரீ-புக்கிங் கடந்த ஜனவரி 18 முதல் துவக்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் உட்பட ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ரீடெயிலர்களிடமிருந்து ஆர்டர் செய்யலாம். ஒருவர் சாம்சங்கின் வெப்சைட்டில் இருந்து இந்த புதிய சீரிஸில் இருக்கும் S24 அல்ட்ராவை வாங்க விரும்பினால் அவருக்காக டைட்டானியம் ப்ளூ, டைட்டானியம் ஆரஞ்சு மற்றும் டைட்டானியம் கிரீன் ஆகிய மூன்று பிரத்தியேக கலர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட் போன்களை ஜனவரி 18 முதல் ப்ரீ-புக்கிங் செய்து வரும் நிலையில் ஜனவரி 31 முதல் இந்தியாவில் இந்த சீரிஸ் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *