சனி உதயத்தால் இந்த ராசிகளுக்கு சனி தோஷ நிவாரணம்: இனி ராஜயோகம் ஆரம்பம்
Shani Uday: அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ள சனிபகவான் கலியுகத்தில் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். நல்ல செயல்களை செய்பவர்களுக்கு நல்ல பலன்களையும் தீய செயல்களை செய்பவர்களுக்கு பிரச்சனைகளையும் அளிப்பவர் சனி பகவான். சனிபகவானை பார்த்து பொதுவாக மக்கள் அச்சப்படுவதுண்டு. எனினும், சனி நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப தான் பலன்களை அளிக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சனி பகவான் (Lord Shan) தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். இந்த ஆண்டு முழுவதும் அவர் இந்த ராசியில் தான் இருப்பார். பிப்ரவரி 11 ஆம் தேதி சனிபகவான் அஸ்தமன நிலைக்கு சென்றார். மார்ச் 18 ஆம் தேதி அவர் உதயமாகிறார்.
சனி பகவானின் சிறிய அசைவுகளும் பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. இன்னும் சில நாட்களில் அவர் உதயமாகவுள்ளார். சனி உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். இவர்கள் சனிதோஷத்தில் இருந்து நிவாரணம் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்
ரிஷபம் (Taurus)
சனி உதயம் ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். உதயமாகி சனி பகவான் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான மகிழ்ச்சியை அளிக்க உள்ளார். இவர்களது பண வரவு அதிகமாகும். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி தோஷத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் லாபங்கள் பன்மடங்காக அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். பணம் சம்பாதிக்க அதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம் (Libra)
சனி உதயம் துலா ராசிக்காரர்களுக்கு ஆகப்பூர்வமான பலன்களை அளிக்கும். இவர்கள் எந்த செயல்களை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள துலா ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் ஒரு மிகப்பெரிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சனியின் சுப தாக்கத்தால் துலா ராசி காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சனி உதயத்தால் பண வரவு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும்.
தனுசு (Sagittarius)
சனி உதயம் தனுசு ராசிக்காரர்களுக்கு சுபமானதாக பார்க்கப்படுகின்றது. புதிய இடத்தில் இருந்து உங்களுக்கு வேலைக்கான வாய்ப்பு கிடைக்கும். சனி உங்கள் மீது அருள் மழை பொழிவார். உங்கள் வாழ்வில் செல்வச் செழிப்பு அதிகரிக்கும். உங்கள் அயராத உழைப்பிற்கான முழு பலனும் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலைக்கான வாய்ப்பு கிடைக்கலாம். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சனி உதயத்தின் தாக்கத்தால் அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.