Sani Luck: சனியும் சுக்கிரனும் சேர்ந்து அதிர்ஷ்டம் கொடுக்க போகும் ராசிகள்
நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான் எப்போதும் கடின உழைப்புக்கு நல்ல பலன்களை கொடுப்பது இவருடைய வேலை. செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பார். நன்மைகள், தீமைகள் என அனைத்தையும் பாரபட்சம் இல்லாமல் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
செல்வம், செழிப்பு, ஆடம்பரம், மகழ்ச்சி உள்ள தேவைகளுக்கு காரணமாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு சனிபகவானும் சுக்கிர பகவானும் ஒன்று சேர போகின்றனர்.
சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். புத்தாண்டின் தொடக்கத்திலேயே சுக்கிர பகவான் சனியோடு சேர்கிறார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.
மேஷ ராசி
சனி மற்றும் சுக்கிரன் சேர்கையானது உங்களுக்கு நன்மைகளை கொடுக்கப் போகின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பழைய முதலீடுகள் தற்போது நல்ல லாபத்தைப் பெற்றுத் தரப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷப ராசி
சுக்கிரன் மற்றும் சனி சேர்க்கை உங்களுக்கு மங்களகரமானதாக அமையப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருமடங்காக லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
மகர ராசி
சனியும் ,சுக்கிரனும் சேர்ந்து உங்களுக்கு லாபத்தை கொடுக்க போகின்றனர். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உங்களுக்கு கிடைக்கும் இந்த முறை சேமிப்பு உங்களுக்கு அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.