சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுத்தது எல்லாம் ஓகே தான். ஆனா இந்த பையன் இல்லாம என்னடா செய்ய போறீங்க..? இந்திய அணியை விமர்சித்த முன்னாள் வீரர் !!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் முதல் முறையாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடர் 11,14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

ஆஃப்கானிஸ்தான் அணியுடனான தொடருக்கான இந்திய அணியில் கிட்டத்தட்ட நான்கு நான்கு மாதங்களுக்கு பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் இடம்பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியா காயத்தால் அவதிப்பட்டு வருவதால் ரோஹித் சர்மாவே, ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாகவும் செயல்பட உள்ளார்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா, வாசிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய் உள்ளிட்ட வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்கள் ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும், இஷான் கிஷன் உள்ளிட்ட சில வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, இஷான் கிஷனிற்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவை விமர்சித்து பேசியுள்ளார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், ‘ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியில் இஷான் கிஷனுக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஜித்தேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக இடம்பெற்றுள்ளனர், இருந்தாலும் சஞ்சு சாம்சன் கடந்த தொடர்களில் விக்கெட் கீப்பராக பயன்படுத்தப்படவில்லை. இஷான் கிஷனே இந்திய அணீன் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அப்படி இருக்கையில் எதற்காக இஷான் கிஷனிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்கவில்லை என்பது தெரியவில்லை. அதே போன்று ஸ்ரேயஸ் ஐயருக்கும் எதற்காக அணியில் இடம் கொடுக்கவில்லை என்பது புரியாத புதிர் தான். தென் ஆப்ரிக்கா அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஸ்ரேயஸ் ஐயரை, எதற்காக தற்போது நீக்கியுள்ளார்கள் என்பது தெரியவில்லை’ என்று தெரிவித்தார்.

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, வாசிங்டன் சுந்தர், அக்‌ஷர் பட்டேல், ரவி பிஸ்னோய், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான், முகேஷ் குமார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *