“கில்லை விட சர்பராஸ் கானுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்னு நம்பறிங்களா?.. சான்சே கிடையாது” – இந்திய முன்னாள் வீரர் அதிரடி பேச்சு
தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் பிளேயிங் லெவனில் இடம்பெறக்கூடிய வீரர்களாக இருக்கின்ற சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் தொடர்ச்சியாக பேட்டிங்கில் சுமாரான செயல்பாட்டையே வைத்திருக்கிறார்கள்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைவதற்கு இந்த இரண்டு வீரர்களின் மிகச் சுமாரான பேட்டிங் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
எனவே இந்த இரண்டு வீரர்களையுமே இந்திய டெஸ்ட் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.
அதே சமயத்தில் இந்திய முன்னாள் வீரர்கள் சிலர் இந்த இரண்டு வீரர்களும் திறமையானவர்கள், எதிர்காலத்தில் சாதிப்பார்கள், எனவே வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஆதரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்பொழுது சர்ப்ராஸ் கான் மற்றும் ரஜத் பட்டிதார் இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு தர முடிகின்ற சூழல் நிலவுகிறது. கில் மாதிரி ஒருவரை வெளியில் வைத்து சர்பராஸ் கானுக்கு வாய்ப்பை தர மாட்டார்கள் என்றே தெரிகிறது.
இது குறித்து பேசி உள்ள இந்திய முன்னால் விக்கெட் கீப்பிங் துவக்க ஆட்டக்காரர் தீப்தாஸ் குப்தா கூறும்பொழுது ” சர்பராஸ் கான் கடந்த இரண்டு மூன்று வருடங்களில் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக இருக்கிறார் என்பதற்கான பெருமை அவருக்கு சேரும். சமீபத்தில் இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராகவும் அவர் நிறைய ரன்கள் எடுத்தார்.
ஆனால் தற்பொழுது இந்திய அணியில் இவர் யாருக்கு பதிலாக என்பதில்தான் பெரிய கேள்வி இருக்கிறது. இந்த வீரர் இருக்க வேண்டும், இந்த வீரர் இருக்கக் கூடாது என்று நாம் எளிதாக சொல்லி விடுகிறோம். ஆனால் ஒரு அணியில் மொத்தமாக 15 பேர் மட்டும்தான் இடம் பெற முடியும். அதில் 11 பேர்தான் விளையாட முடியும். சர்பராஸ் கான் குறித்து அவர் பெரிய போட்டிகளில் ரன் அடிக்கவில்லை என்று மக்கள் பேசுவதை கேட்க முடிகிறது.