ஜெய்ஸ்வாலுக்கு சர்பராஸ் கான் களத்தில் செய்த 2 நெகிழ்ச்சியான செயல்.. என்ன மாதிரியான வீரர்
தற்பொழுது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டில் நான்காவது நாளில் இந்திய இளம் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடிய எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இரட்டை சதம் அடித்திருக்கிறார்.
இவருடன் இணைந்து விளையாடிய, அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடும் சர்பராஸ் கான் சூழ்நிலைக்கு தகுந்தபடி அதிரடியாக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைத்ததம் அடித்து அட்டகாசப்படுத்தி இருக்கிறார்.
இன்று இந்திய அணியினர் வெளிப்படுத்திய பேட்டிங்கை பார்க்கும் பொழுது, சச்சின் சேவாக் காலத்தில் இந்தியா பேட்ஸ்மேன்கள் உள்நாட்டில் எப்படி டெஸ்ட் விளையாடுவார்களோ அதை பார்ப்பது போலவே இருந்தது.
சமீப காலமாக இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக திணறி வந்த நிலையில், இந்த இரண்டு இளம் வீரர்களும் அனாயசமாக சுழற் பந்துவீச்சை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஜெய்ஷ்வால் இரட்டை சதத்தை அடிக்கும் பொழுது, மும்பை அணியில் அவருடைய சீனியரான சர்பராஸ் கான் தன்னுடைய ஜூனியர் ஜெயஸ்வால் இரட்டை சதத்தை, ரன் ஓட ஓட கொண்டாடி வெளிப்படுத்தினார்.
அடுத்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டிக்ளேர் செய்ய, ஜெய்ஸ்வால் தன்னுடைய சீனியர் சர்பராஸ் கானை அழைக்க, சர்பராஸ் கான் உடன் வர மறுத்து ‘இது உனக்கான நாள். எல்லா பாராட்டும் உனக்காகவே இருக்க வேண்டும்’ என்பதாக அவரை முன்னே அனுப்பி வைத்து, நிறைய இடைவெளி விட்டு பின்னே வந்தார்.