ரோகித் அணியைக் கதறவிட்ட சர்ஃப்ராஸ் கான்.. ருதுராஜுக்குப் பதிலாக இடம்கிடைக்குமா?

டெஸ்ட் போட்டிகளுக்கு எதிராக இந்திய அணி பங்கேற்கும் ஒவ்வொரு தொடரின்போதும், மும்பை அணி வீரரான சர்ஃப்ராஸ் கான் பெயர் அடிபடும்.

ஆனால் கடைசிவரை அவரது பெயர் தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்படாது.

அதேநேரத்தில், இந்தியா எதிர்கொள்ள இருக்கும் டெஸ்ட் போட்டி தொடர்களுக்கு முன்பாக நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் சர்ஃப்ராஸ் கான், சதமடித்து தன் பெயரையும், திறமையையும் நிரூபித்துக் கொண்டே இருப்பார். இந்த முறையும் அதேநிகழ்வு நடந்துள்ளது.

அதன்படி வரும் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்க இருக்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியை முதல் டெஸ்ட் போட்டியில் சந்திக்க இருக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதில் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, குடும்பச் சூழ்நிலை காரணமாக தாயகம் திரும்பியுள்ளார். எனினும் அவர் முதல் போட்டியில் கலந்துகொள்வார் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல், இத்தேர்வில் இடம்பெற்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட், கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். ஆயினும், ருதுராஜ் கெய்க்வாட்டிற்குப் பதிலாக இதுவரை பிசிசிஐ யார் பெயரையும் இதுவரை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் ரோகித் தலைமையிலான இந்திய அணி – இந்தியா ஏ அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் இந்தியா ஏ அணியில் இடம்பிடித்துள்ள சர்ஃப்ராஸ் கான், சதம் அடித்து தாம் யார் என்பதை நிரூபித்துள்ளார். இதன்மூலம், ருதுராஜுக்குப் பதிலாக சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

அவர் அடித்த சதம் காரணமாக, சர்ஃப்ராஸ் மாற்று வீரராக டெஸ்ட் அணியில் சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் போட்டியில் அவர் 61 பந்துகளில் சதம் அடித்துள்ளார். தவிர, அவர் மும்பை மாநில அணிக்காக ஆடி மிகச் சிறந்த ரெக்கார்டை வைத்து இருக்கிறார். அவரது முதல் தர போட்டிகளுக்கான பேட்டிங் சராசரி 72 ஆக உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *