சாரி மேம் வர முடியல!.. பிரேமலதாவிடம் தொலைப்பேசி மூலம் வருத்தம் தெரிவித்த அஜித்!.
நடிகர் விஜயகாந்த் நேற்று காலை சென்னை மியாட் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரின் மரணம் அவரின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, நேற்று காலை முதலே திரையுலகை சேர்ந்த பலரும் அவரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடியில் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்த ரஜினி இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்திலேயே விஜயகாந்த் பற்றி சில வார்த்தைகள் பேசிய ரஜினி 10.30 மணியளவில் சென்னை தீவுத்திடலுக்கு நேரில் வந்து விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின் விஜயகாந்துடன் தனக்கு நி்கழ்ந்த சில அனுபவங்களையும் பகி்ர்ந்து கொண்டார்.
அதேபோல், நடிகர் கமல்ஹாசன் விஜயகாந்த் இறந்த செய்தி கேள்விப்பட்டதுமே தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவி்த்தார். மேலும், இன்று காலை அவரும் நேரில் வந்து அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல், நடிகர் விஜய் நேற்று இரவு 10 மணிக்கு மேல் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் விஷால் மற்றும் சூர்யா இருவரும் வீடியோக்கள் வழியே அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். இதுபோக மன்சூர் அலிகான் நேற்று காலை முதல் இப்போதுவரை விஜயகாந்தின் உடல் அருகிலேயே நின்று கொண்டிருக்கிறார். ஆனால், நடிகர் அஜித் இதுவரை எந்த இரங்கல் செய்தியும் வெளி்யிடவில்லை.
மேலும், நேரில் வந்தும் அஞ்சலி செலுத்தவில்லை. இந்நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அசர்பைசான் நாட்டில் இருக்கும் அஜித் பிரேமலதா மற்றும் அவரின் சகோதரர் சுதீப் ஆகியோருடன் தொலைப்பேசி வாயிலாக பேசி தனது இரங்கலை தெரிவித்துக்கொண்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை திரும்பியதும் விரைவில் அவர் பிரேமலதாவை நேரில் சந்தித்து விஜயகாந்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.