உதயமானார் சனி.. இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் அமோகமாக ஆரம்பம்
மார்ச் 18, 2024 அன்று, அதாவது சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் உதயமானார். சனியின் உதயம் மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த சனி உதயத்தால் சில ராசிக்காரர்களுக்கு அசு பலனையும், சில ராசிக்காரராகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும்.
மேஷம்: மனம் மகிழ்ச்சியாக இருக்கும். முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கல்வியில் மகிழ்ச்சியான முடிவுகளை பெறலாம்.
ரிஷபம்: மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும். நம்பிக்கை குறைவு ஏற்படலாம். தேவையற்ற கோபம் மற்றும் வாக்குவாதத்தை தவிர்க்கவும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவி கிடைக்கும்.
மிதுனம்: முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். பேச்சில் இனிமை இருக்கும். உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திப்பது நல்லது. புதிய வேலை வாய்ப்பை பெறலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.
கடகம்: மனம் கலங்கலாம். சுய கட்டுப்பாட்டுடன் இருக்கவும். தேவையற்ற கோபம் மற்றும் வாக்குவாதத்தை தவிர்க்கவும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வருமானம் அதிகரிக்கும்.
சிம்மம்: மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். நம்பிக்கையின்மை அதிகரிக்கும். போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
கன்னி: முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். பெற்றோரின் அனுகூலத்தைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணி மாற்றம் ஏற்படலாம். கடின உழைப்பு அதிகமாக செய்ய வேண்டியிருக்கும். அதிகாரிகள் மற்றும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
துலாம்: முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். மனம் கலங்கலாம். பொறுமை தேவை. அதிக ஆர்வத்துடன் இருப்பதை தவிர்க்கவும். ஆரோக்கியத்த்தில் கவனம் தேவை. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்: நம்பிக்கை குறைவு ஏற்படலாம். சுய கட்டுப்பாட்டுடன் இருக்கவும். குடும்ப ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். அதிகமான கடின உழைப்பு தேவைப்படும்.
தனுசு: முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். மனம் கலங்கலாம். பொறுமையைக் கடைப்பிடிக்க முயற்சியுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை பெறலாம்.
மகரம்: பணியிடத்தில் உயர் பதவியைப் பெறலாம். புதிய வேலை வாய்ப்பை பெறலாம். வருமானம் உயரும். வியாபாரிகள் நல்ல லாபத்தை பெறுவார்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
கும்பம்: மனம் கலங்கலாம். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.
மீனம்: நம்பிக்கையின்மை ஏற்படலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்துடன் மத ஸ்தலங்களுக்கு செல்லலாம். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.