சதய நட்சத்திரத்தில் சனி.., எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 3 ராசியினர்
கடந்த ஜனவரி 27-ம் திகதி சதய நட்சத்திரத்தில் மூன்றாம் பாகத்தில் சனி சஞ்சரிக்கிறார்.
பிப்ரவரி 10ஆம் தேதி வரை இதே நிலை தான் நீடிக்கும். அதன் பின் தனது ராசி நட்சத்திரத்தினை மாற்றுகிறார்.
இதனால் 3 ராசியினர் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்கவேண்டும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ரிஷபம்
சனியின் நட்சத்திர மாற்றத்தால் கெடுபலன்களே கிடைக்கும்.
பொதுவெளியில் உங்களுடைய செயல்பாடுகளில் கவனம் தேவை.
போக்குவரத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
வீண் அலைச்சல் உண்டாகும்.
அனைவரையும் நண்பர்கள் போல் நினைத்துப் பேசாதீர்கள்.
சில இடங்களில் ஏமாறுவதற்கு வாய்ப்புண்டு.
உடல்நலன் பாதிப்பு உண்டாகும்.
கடகம்
உழைப்புக்குண்டான பெயர் கிடைக்காமல் போகலாம்.
பணியில் நேர்மையோடு இருங்கள்.
வியாபாரிகளுக்கு நஷ்டம் உண்டாகும் சூழல் உருவாகியுள்ளது.
முடிந்தளவு கடன் கொடுக்காதீர்கள்.
யாருக்கும் பிணை கையெழுத்துப் போடாதீர்கள்.
துலாம்
சில கெடுபலன்களைத் தரப்போகிறது.
உடல் வலி மற்றும் முதுகுவலி உண்டாகலாம்.
எதனையும் பதற்றப்படாமல் செய்யுங்கள்.
மனக்குழப்பங்கள் வரும் என்பதால் தினமும் யோகா செய்யலாம்.
நகை, செல்போன் போன்ற பொருட்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
பிறந்த வழி உறவுகள், மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும்.