30 ஆண்டுகள் கழித்து சனி- செவ்வாய் சந்திப்பு: நிதி இழப்பை சந்திக்க போகும் மூன்று ராசிகள் யார்?

ஒவ்வொரு செயலையும் செய்யக்கூடிய எண்ணத்தை தரக்கூடியவர் தான் சூரியன். இந்த செயலை நல்லபடியாக செய்து முடிக்க சக்தி மற்றும் ஆர்வத்தை தரக்கூடியவர் செவ்வாய் பகவான்.

இந்த செவ்வாய் பகவான் மார்ச் 15 ம் திகதி மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால் சிலரின் வாழ்க்கையில் பிரச்னைகளும், கவலைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த வெ்வாய் மற்றும் சனியின் சந்திப்பு கும்ப ராசியில் 30 ஆண்டுகள் பின்பு நிகழவிருக்கிறது. இந்த இணைப்பின் காரணமாக மூன்று ராசிகள் நிதி நஷ்டங்கள், வேலையில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அது எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.

1.விருச்சிகம்

சனி மற்றும் செவ்வாயின் இணைவால் உங்களுக்கு பிரச்சனைகள் நிறையவே வர போகிறது. இதனால் வீண் செலவும், இழப்பும் ஏற்படும்.

மற்றும் ஒரு செயலை செய்யும் போது வீண் அலைச்சலும், பண செலவும் ஏற்படும். நீங்கள் எந்த ஒரு புதிய வேலை, தொழிலை தொடங்குவதற்கு முன் பல முறை யோசிக்கவும்.

நல்ல விஷயங்கள் எதிலும் கலந்து கொள்ள முடியாத நிலை எற்படும். ஓய்வு என்பது கிடைக்காது.

2.கடகம்

நீங்கள் அவசியமற்ற செலவை செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும். உடல் நல குறைபாடுகள் வரும். நீங்கள் எதை எடுத்தாலும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

முதலீடுகள் செய்யும் முன் பல முறை யோசிப்பது நல்லது. சனியின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். உங்கள் செயல்களின் சுமையால், மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.

3.மீனம்

மீன ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை நடக்கிறது. உங்களின் ஆளுமை என்பது காணாமல் போய் விடும்.

தவறான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகுவீர்கள். தேவையற்ற செலவுகள் செய்வீர்கள். ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்க்கவும். புதிய தொழில், வியாபாரத்தில் தடைகள் ஏற்படலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *