சனி- செவ்வாய் சேர்க்கை: கஷ்டப்படப் போகும் ராசியினர்- உங்க ராசியும் இருக்கா?

நவகிரகங்களின் நீதிமானாக வியங்கும் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின்னர் தனது சொந்த ராசியான கும்பத்தில் பயணம் செய்கிறார்.

நாம் செய்த செயலுக்கு எப்போதும் பிரதிபலன்களை திருப்பி தரக்கூடிய சனி பகவான், ஒரு ராசியின் சஞ்சாரம் செய்ய இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.

நவகிரகங்களின் தளபதியான செவ்வாய், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக்கொள்கிறார், இவரும் கும்ப ராசியில் நுழைய இருப்பதால் 30 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டும் ஒன்று சேர்கின்றனர்.

இதனால் அனைத்து ராசிகளிலும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

யார் அந்த ராசியினர் என்பது குறித்தும் பலன்கள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.

விருச்சிகம்
உங்களது ராசியில் நான்காவது வீட்டில் இரண்டு ராசிகளும் இணையவிருப்பதால் உங்களுக்கு நிதி நிலைமையில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் வரலாம், புதிய தொழில் தொடங்கும் திட்டம் இருந்தால் தள்ளிவைப்பது நல்லது.

பணம் சம்மந்தப்பட்ட விஷயங்களிலும் கவனம் தேவை.

கடகம்
உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் இருவரும் இணைவதால் நீங்களும் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்.

நிதி இழப்புகள் ஏற்படலாம், பயணம் மேற்கொள்ளும் போது அதீத கவனமுடன் இருக்கவும், புதிய முதலீடுகள் எதுவும் வேண்டாம்.

நஷ்டங்களால் மன உளைச்சல் ஏற்படலாம்.

மீனம்
உங்கள் ராசியின் 12வது வீட்டில் இருவரும் இணைவதால் மன அழுத்தம் ஏற்படலாம்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்படும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்கவும்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *