சனி பெயர்ச்சி பலன்.. தொழில் சனி.. 2024ல் தொழிலில் தொட்டதெல்லாம் லாபம் யாருக்கு தெரியுமா?
சென்னை: 2024ஆம் ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனி பகவான் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு அற்புதமான யோகத்தை தரப்போகிறார். தொழில் சனி அதிசய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. வியாபாரம், தொழிலில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார் என்று பார்க்கலாம்.
ரிஷபம்: 2024ஆம் ஆண்டு முழுமையான விடியலை தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும் ஆண்டாக அமையப்போகிறது. உங்க ராசிக்கு சனிபகவான் பரிபூரண யோகத்தை தரக்கூடியவர் சனிபகவான். காரணம் அவர் உங்க ராசிக்கு ஒன்பது மற்றும் பத்தாம் வீட்டு அதிபதி. அதிர்ஷ்டத்தை அதிகரிப்பார். வெளிநாட்டில் இருந்து வருமானம் வரப்போகிறது. அஷ்டமத்து குருவாக இருந்தாலும் அதிர்ஷ்டத்தை தரப்போகிறார் காரணம் அவருடைய பார்வைதான்.
தொழிலில் சாதனை: சனி பகவான் பார்வை 12ஆம் வீட்டின் மீது விழுவதால் வெளிநாடு செல்லும் யோகத்தையும் அங்கே போய் பிசினஸ் செய்யும் வாய்ப்பை தரப்போகிறார். உங்க எதிர்காலம் அற்புதமாக அமையப்போகிறது. இனி உங்களுக்கு எல்லாம் சுகமாக அமையப்போகிறது. தொழில் தொடங்குவதில் இருந்த தடைகள் நீங்கும். தொழிலில் சரிவு நஷ்டமடைந்து கடனை சந்தித்தவர்களுக்கு இனி பிரச்சினைகள் தீரும். தொழிலில் உங்க திறமை பளிச்சிடும். செய்யப்போகும் தொழிலின் மூலம் லாபம் கிடைக்கும்.
லாபம் நிறைந்த 2024: சனி பெயர்ச்சியால் உங்களுக்கு பணவருமானம் அதிகமாக இருந்தாலும் உங்களின் நிதியை நிர்வாகம் செய்வதில் கரெக்டாக இருங்கள். பங்கு சந்தையில் தேவையில்லாமல் முதலீடு செய்யக் கூடாது. தேவையில்லாமல் பிறருக்கு கடன் கொடுக்கக்கூடாது. சனியின் பார்வை உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் உள்ள குருவின் மீது விழுவதால் உங்களுக்கு வருமானம் கூரையை பிய்த்துக்கொண்டு கொண்டும்.
அதிர்ஷ்டமான ஆண்டு: சனிபகவான் 2024ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். கடைகளில் மொத்தமாக பொருட்களை வாங்கி வைக்க வேண்டாம். விற்க விற்க வாங்கி வைக்கவும். அதிகமாக வாங்கி குவித்தாலும் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் தொழில் ரீதியாக கடன் கொடுக்கவேண்டாம். உங்க பொருளாதார நிலை நன்றாக அமையக்கூடியதாக ஏற்றங்களை தரக்கூடிய ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது.