148 ஆண்டுக்குப் பின் இணையும் சனி சுக்கிரன் செவ்வாய்… இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்
கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகம், சுக்கிரன் மற்றும் சனி தேவன் இருக்கும் கும்ப ராசியில், பெயர்ச்சியாகி உள்ள நிலையில், கும்ப ராசியில் சனி, செவ்வாய் சுக்கிரன் ஆகியோர் இணைந்துள்ளனர். 148 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள இந்த சேர்க்கையினால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நிம்மதி பிறக்கும். அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
கிரகங்களின் இளவரசி அல்லது தலைவலி என்று அழைக்கப்படும் செவ்வாய் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி கும்ப ராசிகள் நுழைந்தார். தைரியத்தையும் மன உறுதியையும் கொடுக்கும் செவ்வாய், ஆடம்பரத்தை அழிக்கும் கிரகமான சுக்கிரன், கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனீஸ்வரன், ஆகியோருடன் இணைந்திருக்கிறார். இதனால் வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலத்தை பெறப்போகும் ராசிகளை அறிந்து கொள்வோம்.
மேஷ ராசி
மேஷ ராசியினருக்கு (Aries Zodiac Sign) சனி செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை, பண பலன்களை அள்ளிக் கொடுப்பதாக இருக்கும். எதிர்பாராத வகையில் கிடைக்கும் நிதி ஆதாயம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கைக்கு வராது என்று நினைத்த பணமும் கைக்கு வரலாம். வேலையில் தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். மேலதிகாரியின் பாராட்டினை பெறுவார்கள். வேலையில் தொழிலில் எதிர்பார்த்து வெற்றி கிடைப்பதால், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். முதலீடுகள் செய்யும் ஆஅர்வம் உண்டாகும்.
தனுசு ராசி
சனி செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை தனுசு ராசிகளுக்கு (Sagittarius Zodiac Sign)தைரியத்தையும் மன உறுதியையும் அளிக்கும். மூலம் கௌரவம் வந்து சேரும். வேலையில் தொழிலில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி குழந்தைகள் தரப்பிலிருந்து மகிழ்ச்சியான செய்தி வரும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வாழ்க்கையில் வீடு வாங்கும் கனவு நிறைவேறும். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். வால்கள் அனைத்தையும் திறமையாக கையாண்டு, அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள்.
கன்னி ராசி
கன்னி ராசியினருக்கு (Virgo Zodiac Sign) சனி செவ்வாய் மற்றும் சுக்கிரனையும் சேர்க்கை சாதகமான பலன்களை அள்ளிக் கொடுக்கும். கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை துவங்குவார்கள். நீண்ட காலமாக வாட்டி வந்த நோயிலிருந்தும் நிவாரணம் பெறலாம். வெளிநாட்டில் வேலை செய்யவும் கல்வி கற்கவும் விரும்புவார்கள், அது தொடர்பாக நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். கடின உழைப்புடன் அதிர்ஷ்டமும் கை கொடுக்கும்.