இன்னும் 5 நாட்களில் சனி உதயம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பிக்கும்

சனி பகவானை நாம் நீதியின் கடவுள் என்று அழைக்கிறோம். ஏனெனில் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ள சனிபகவான் கலியுகத்தில் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். சனி பகவான் (Lord Shan) தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். இந்த ஆண்டு முழுவதும் அவர் இந்த ராசியில் தான் இருப்பார். பிப்ரவரி 11 ஆம் தேதி சனிபகவான் அஸ்தமன நிலைக்கு சென்றார். தற்போது இன்னும் 5 நாட்களில் அதாவது மார்ச் 18, 2024 (சனி உதய் 2024) அன்று கும்ப ராசியில் உதயமாகப் போகிறார். சனி பகவானின் சிறிய அசைவுகள் கூட ஜோதிடத்தில் நிகழ்வாகக் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் சனியின் உதயம் பல ராசிக்காரர்களுக்கு தாக்கம் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் சாதாகமான பலனைத் தரும் | (Shani Uday 2024 lucky For These Zodiac Signs):

மேஷம் (Aries Zodiac Sign) : மேஷ ராசிக்காரர்களுக்கு கும்ப ராசியில் சனியின் உதயத்தால் சுபிட்சமாகன பலன் கிடக்கும். அதனுடன் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானம் பெருகும், அனைத்து துறையிலும் வெற்றி அலை வீசும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை பெறலாம். வியாபாரம் ஆதாயமடையும். நிறைய லாபத்தை பெறுவீர்கள், இந்த பணத்தையும் சேமிப்பீர்கள்.

கன்னி (Virgo Zodiac Sign) : கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் சுப பலனைத் தரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். அனைத்து துறையிலும் வெற்றி அலை உண்டாகும். கடின உழைப்பிறகு ஏற்ற பலனைப் பெறுவீர்கள், செல்வம் பெருகும். வேலையில் இடமாற்றம் ஏற்படலாம். தொழிலில் லாபம் கூடும், உத்தியோகத்தில் சம்பளம் உயரலாம்.

துலாம் (Libra Zodiac Sign) : துலாம் ராசிக்காரர்களுக்கு, சனி உதயத்தால் அதிர்ஷ்டகரமான பலன் கிடைக்கும். சனிபகவானின் உதயத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் ஏற்றம் இருக்கும். தொழிலில் திருப்தி அடைவீர்கள். மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பலவித புதிய வாய்ப்புகளை நீங்கள் பெறலாம். கடின உழைப்புக்கு தகுந்த பலனை பெறுவீர்கள். சனியின் அருளால் வெற்றி கிட்டும்.

தனுசு (Sagittarius Zodiac Sign) : தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் அதிக நன்மைகள் கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்கலாம். வேலை தொடர்பாக நல்ல செய்தியை பெறலாம். சனியின் அருளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *