கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம் செய்யும் சத்ய நாடெல்லா.. 1900 பேரை வீட்டுக்கு அனுப்பும் மைக்ரோசாப்ட்..!
உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வரும் வேளையில், மைக்ரோசாப்ட் இந்த வாரம் Activision Blizzard மற்றும் எக்ஸ்பாக்ஸ் பிரிவில் சுமார் 1,900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.சமீபத்தில் மைக்ரோசாப்ட் உடன் Activision Blizzard இணைப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில், கூடுதலாக இருக்கும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் திட்டத்துடனும், நிர்வாகத்தை எளிமையாக்கும் திட்டத்துடன் இந்தப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் தற்போது பணிநீக்கம் செய்ய உள்ள பணிநீக்கத்தில் பெரும் பகுதி ஊழியர்கள் Activision Blizzard நிறுவனத்தில் இருக்கும், கணிசமான எண்ணிக்கையிலான பணிநீக்கம் எக்ஸ்பாக்ஸ் மற்றும் ZeniMax பிரிவில் இருக்கும் எனத் தெரிகிறது.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கேமிங் பிரிவில் மொத்தம் 22,000த்திற்கும் அதிகமான ஊழியர்களை இருக்கும் வேளையில் இந்தப் பணிநீக்கம் மூலம் சுமார் 8 சதவீத ஊழியர்கள் தங்களுடைய பணியை இழக்க உள்ளனர்.
இறுதியாக மைக்ரோசாப்ட் கேமிங் தலைமை நிர்வாக அதிகாரி பில் ஸ்பென்சர் இந்தப் பணிநீக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.இந்தப் பணிநீக்கம் குறித்து மைக்ரோசாப்ட் வெளியிட்ட அறிக்கையில்,ஆக்டிவிஷன், ப்ளிஸார்ட் மற்றும் கிங் அணிகள் மைக்ரோசாப்டில் இணைந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 2024 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நேரத்தில் மைக்ரோசாப்ட் கேமிங் மற்றும் ஆக்டிவிஷன் ப்ளிஸார்டின் தலைமை முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
சென்னை-க்கு வந்த மைக்ரோசாப்ட்! கூடவே அம்பானியும், அதானியும் வந்துட்டாங்க.. இது வேற லெவல் விஷயமாச்சே! வளர்ந்து வரும் கேமிங் பிரிவின் வணிகத்திற்கும் உதவியாகக் குறைவான செலவில் இயக்கும் கட்டமைப்பைக் கொண்ட ஒரு உத்தி மற்றும் செயல்படுத்தல் திட்டத்தை உருவாக்க உறுதி எடுத்துள்ளோம். மேலும் மைக்ரோசாப்ட், ஆக்டிவிஷன், ப்ளிஸார்ட் மற்றும் கிங் ஆகியவை ஒரே பிரிவாக இணைந்தது மூலம் ஒன்றுடன் ஒன்று ஓவர்லேப் ஆகியுள்ள பணியிடத்தை நீக்க உள்ளோம்.இதற்கு மத்தியில் ப்ளிஸார்ட் பிரிவின் தலைவர் Mike Ybarra பணியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளார்.