வங்கிகளில் சேமிப்பு கணக்கு இருக்கா..? முதல்ல இதை படியுங்க..! – 80TTA

ம்மில் பெரும்பாலானவர்களுக்கு வங்கிகளில் சேமிப்பு கணக்கு உண்டு. அதில் வைக்கப்படும் தொகைக்கு அந்த வங்கிகளின் வட்டி விகிதங்களுக்கு ஏற்ப அவ்வப்போது வட்டி வழங்கப்படுகிறது.
இந்த வட்டி தொகை வருமான வரி கணக்கில் காட்டப்பட வேண்டிய ஒன்று.அச்சச்சோ! எனக்கு வரி போடுவாங்களா என பதற வேண்டாம். அதை எப்படி டீல் செய்வது என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். பிரிவு 80TTA: வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து நமக்கு கிடைக்கும் வட்டி தொகையை ‘Income from other sources -மற்ற ஆதாரங்களில் இருந்து வருமானம்’ என்ற பிரிவில் நாம் வருமான வரி தாக்கலின் போது சுட்டிக்காட்ட வேண்டும்.
இப்படி கிடைக்கும் வட்டி தொகையில் ரூ. 10,000 வரை வரி விலக்கு வழங்கும் ஒரு பிரிவு தான் வருமான வரி சட்டத்தின் 80TTA.எதற்கெல்லாம் விலக்கு உண்டு?:அரசால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்கில் கிடைக்கும் வட்டி தொகைகூட்டுறவு சங்கங்கள் மற்றும் அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகளில் கிடைக்கும் வட்டி தொகைRD எனப்படும் தொடர்ச்சியான வைப்புத்தொகை, FD எனப்படும் நிலையான வைப்புத்தொகையில் கிடைக்கும் வட்டிக்கு இந்த பிரிவில் வரி விலக்கு கிடைக்காதுயாரெல்லாம் தகுதி வாய்ந்தவர்கள்?தனிநபர் மற்றும் பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினர் இந்த பிரிவினை பயன்படுத்தலாம்அதே போல வெளிநாடு வாழ் இந்தியர்களும் இதனை பயன்படுத்தலாம்60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த பிரிவு பொருந்தாது.அதிகபட்சம் எவ்வளவு வரிச்சலுகை?இந்த பிரிவின் கீழ் ரூ.10,000க்கு மேல் வரிச் சலுகை கோர முடியாது.
ரூ.10,000க்கு கீழ் கிடைத்த வட்டி தொகைக்கு மட்டுமே வரி விலக்கு உண்டு. பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால், அதில் கிடைத்த வட்டி தொகை அனைத்தையும் கவனத்தில் கொள்ளவும்.புற்றுநோய் முதல் பல மருத்துவ சிகிச்சைகளுக்கு வருமான வரி சலுகை.. பிரிவு 80DDB தெரியுமா உங்களுக்கு?! உதாரணம்:வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது Income from other sources என்ற பகுதியில் வட்டியாக கிடைத்த தொகையை சேர்க்க வேண்டும் , பின்னர் மொத்த வருமானம் கணக்கிட்டு, பிரிவு 80TTAஇன் கீழ் விலக்கு கோரலாம்.
உதாரணத்திற்கு மணி என்பவரின் ஆண்டு வருமானம் ரூ 5 லட்சம், வங்கி சேமிப்பு கணக்கில் அவருக்கு கிடைத்த வட்டி ரூ.12,000 என்றால் வருமான வரி தாக்கலின் போது மற்ற ஆதாரங்களில் இருந்து வருமானத்தில் இந்த ரூ.12,000ஐ சேர்க்க வேண்டும். எனவே மொத்த வருமானம் ரூ.5,12,000ஆக மாறும். பின்னர் 80TTA பிரிவில் ரூ.10,000 வரி விலக்கு அளிக்கப்பட்டு, மொத்த வருமானம் ரூ.5,02,000ஆக கணக்கு வைத்து கொள்ளப்படும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *