தொங்கும் தொப்பைக்கு குட்பை சொல்ல… முருங்கை கீரையை இப்படி சாப்பிடுங்க..!

முருங்கை மரத்தின் இலைகள், பூ, காய்கள் என எல்லாமே ஆரோக்கிய நன்மை நிறைந்தது. முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து என நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நமது உடலுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில், 18 அமினோ அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு, மற்ற இரும்பு ந்சத்து மிக்க ஒப்பிடுகையில், முருங்கை இலையில் 25 மடங்கு அதிக இரும்புச் சத்து காணப்படுகிறது. எனவே இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால், கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

முருங்கை கீரையில் உள்ள ஊட்டசத்துக்கள்

முருங்கை கீரையில், துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் இதில் காணப்படுகின்றன. மேலும், இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக் கொண்டால், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ,வைட்டமின் பி, வைட்டமின் கே மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட பல முக்கிய ஊட்டசத்துக்கள் கிடைக்கும்.

உடல் பருமனைப் போக்கும் முருங்கை கீரை

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் ஒரு பொதுவான பிரச்சனையாக ஆகி விட்டது. உடலில் கொழுப்பு அதிகரித்தால், கூடவே, உடலில் பல பிரச்சனைகளும் அதிகரிக்கத் தொடங்கும். எடை அதிகரித்தவுடன், முதலில் உண்டாவது தொப்பை தான். தொங்கும் தொப்பை ஆரோக்கியத்தை மட்டுமல்ல… தோற்றத்தையும் கெடுக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுடன், முருங்கையில் கீரையில் தயாரிக்கப்படும் இந்த ஆரோக்கியமான பானத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வன் மூலம் உங்கள் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும். உடல் எடையை குறைக்க முருங்கை கீரையை எப்படி உண்பது என்பதை அறிந்து கொள்ளலாம்.

உடல் எடையை குறைக்க முருங்கை கீரையை உட்கொள்ளும் முறை

உடல் பருமனை குறைக்க முருங்கை இலையை பல வழிகளில் பயன்படுத்தலாம். இருப்பினும், முருங்கை இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கஷாயம் தயாரிக்க, 1 கப் தண்ணீர் எடுத்து, அதில் முருங்கை இலைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். சிறிது நேரம் கொதித்ததும் இந்த நீரை வடிகட்டி குடிக்கவும். இதன் மூலம், பல ஆண்டுகளாக சேந்துள்ள கொழுப்பு கூட எளிதில் கரையத் தொடங்கும். முருங்கை இலைகளை ஸ்மூத்தி அல்லது ஏதேனும் ஜூஸில் சேர்த்துக் குடிக்கலாம். முருங்கை இலைகளை காயவைத்து பொடி செய்து வைத்துக் கொண்டும், சூடான நீரில் கலந்து குடிக்கலாம். முருங்கை கீரையை தினமும் உட்கொள்வதன் உடலை சிக்கென்று (Weight Loss Tips) வைத்துக் கொள்ளலாம்.

முருங்கை கீரையில் பிற ஆரோக்கிய நன்மைகள்

உயர் இரத்த அழுத்தம்

இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த முருங்கை இலை கஷாயம் உதவியாக இருப்பது பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. முருங்கைகாய் கஷாயம் அருந்திய ரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் இரண்டிலும் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

யூரிக் அமிலம்

முருங்கை இலை கஷாயத்தில், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீனாலிக் அமிலங்கள் உள்ளிட்ட சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு கலவைகள் உள்ளன. இவை உடலில் வீக்கத்தைக் குறைப்பதுடன், யூரிக் அமிலத்தையும் குறைக்க உதவுகிறது. இதனால் கீல்வாத வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

நீரிழிவு

முருங்கைக் கீரை,இன்சுலின் அளவை இயற்கையாக அதிகரித்து சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

கொல்ஸ்ட்ரால்

கொலஸ்ட்ராலைக் குறைக்க முருங்கை கீரையை உட்கொள்வது மிகவும் பலனளிக்கும். முருங்கை இலை இதயத்தை சிறப்பாகச் செயல்பட வைக்கிறது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் அமிலம் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.

முதுமை

முருங்கை கஷாயத்தில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் முதுமை நெருங்காமல் இருக்கும். கூடுதலாக, முருங்கை இலை கஷாயத்தில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் சேர்மங்கள் உள்ளன. இது சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க்க உதவும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *