எஸ்.பி.ஐ அம்ரித் கலாஷ் எஃப்.டி திட்டம் நீட்டிப்பு: வட்டியை பாருங்க

எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் திட்டமான அம்ரித் கலாஷ் எஃப்.டி திட்டம் 2024 மார்ச் 31ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 7.60% வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.

இது குறித்து எஸ்பிஐ வங்கி விடுத்துளள அறிக்கையில், “7.10 % வட்டி விகிதத்தில் “400 நாட்கள்” (அம்ரித் கலாஷ்) என்ற குறிப்பிட்ட தவணைக்கால திட்டம் வழங்கப்படுகின்றன.

12 ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில், மூத்த குடிமக்கள் 7.60% வட்டி விகிதத்திற்கு தகுதியுடையவர்கள். தற்போது, இந்தத் திட்டம் 31 மார்ச் 2024 வரை செல்லுபடியாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்தத் திட்டத்தின் கீழ், பங்கேற்பாளர்கள் தங்களுக்கு விருப்பமான டெபாசிட் காலத்தைத் தேர்ந்தெடுக்க, மாதாந்திர, காலாண்டு மற்றும் அரையாண்டு விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நெகிழ்வுத்தன்மை அளிக்கப்படுகிறது.

வட்டி நேரடியாக வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும். டிடிஎஸ் மற்றும் பிற பொருந்தக்கூடிய வரிகள் வருமான வரிச் சட்டத்தின்படி கழிக்கப்படும்.

இந்தத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு கடன்களைப் பெறுவதற்கான வழியையும் வழங்குகிறது, மேலும் முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கும் வங்கி உதவுகிறது.

எஸ்பிஐயின் இந்தத் திட்டத்தில் நீங்களும் முதலீடு செய்ய விரும்பினால், அதை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் செய்யலாம். ஆன்லைனில் முதலீடு செய்ய, நீங்கள் நெட் பேங்கிங் அல்லது SBI YONO செயலியை பெறலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *