SBI Loan : செயலாக்கக் கட்டணம் இல்லாத பெர்சனல் லோன்.. அதுவும் ரூ.20 லட்சம் வரை.. முழு விவரம் இதோ..
குடும்பத்தில் ஏற்படும் அவசர செலவுகள் அல்லது கடனை ஒருங்கிணைப்பது போன்ற பல விஷயங்களுக்கு தனிநபர் கடன்கள் (Personal Loan) பயனுள்ளதாக இருக்கின்றன. அந்த வகையில் பலரும் அவசர தேவைக்கு வங்கிகளில் தனிநபர் கடன்களை வாங்கி வருகின்றனர். தனிநபர் கடன் பெற விரும்புவர்களுக்கு, எஸ்பிஐ வங்கி உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது..
ஆம்.. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தற்போது தனிநபர் கடன் வாங்க நினைக்கும் நபர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை வழங்கி உள்ளது. மேலும் தனிநபர் கடன் வாங்கும் செயல்முறையை எளிதாக்கி உள்ளது. அதாவது ரூ.20 லட்சம் வரையிலான தனிநபர் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த சலுகை கடன் வாங்குபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்., ஏனெனில் அத்தகைய கடன்களுக்கான வழக்கமான செயலாக்கக் கட்டணம் கடன் தொகையில் 1.5 சதவிகிதம் ஆகும்.
பண்டிகை தமாக்கா சலுகை
SBI இந்த விளம்பரத்தை “பண்டிகை தமாக்கா” என்று குறிப்பிட்டுள்ளது. மார்ச் 31, 2024 வரை மட்டும் இந்த சலுகை கிடைக்கும். எனவே தனிநபர் கடன பெற வேண்டும் என்று நினைப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்..
தனிநபர் கடன் பெறுவதற்கான தகுதி
எஸ்பிஐ வங்கியின் இந்த சிறப்புச் சலுகையின் பலனை பெற சில தகுதி வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச மாத வருமானம்
இந்த சலுகையைப் பெற முயற்சிக்கும் தனிநபரின் குறைந்தபட்ச மாத வருமானம் ரூ.15,000 ஆக இருக்க வேண்டும்.
வயது
21 முதல் 58 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வேலை
தனிநபர் மத்திய/மாநில/அரசு அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள் அல்லது கல்வி நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 1 ஆண்டு வேலை செய்திருக்க வேண்டும்.
கடன்தொகை எவ்வளவு
கடன் தொகை ரூ 24,000 முதல் ரூ 20,00,000 வரை அல்லது சம்மந்தப்பட்ட நபரின் நிகர மாத வருமானத்தின் 24 மடங்கில் தனி நபர் கடன் வழங்கப்படும்.
நன்கொடை மட்டும் ரூ.8,29,734 கோடி.. உலகின் அதிக நன்கொடை செய்த நபர்.. அம்பானி, ஷிவ் நாடார் இல்ல..
கடனின் முக்கிய அம்சங்கள்
இந்த கடன் குறைந்த வட்டி விகிதங்களுடன் வழங்கப்படுகிறது..
இரண்டாவது கடனுக்கான விருப்பம், கூடுதல் நிதி நெகிழ்வுத்தன்மையை வழஙப்படுகிறது..
குறைந்தபட்ச ஆவணங்கள் தேவை, விண்ணப்ப செயல்முறையை ஒழுங்குபடுத்துகிறது.
20 லட்சம் வரை கடன் கிடைக்கும்.