இந்திய எல்லையில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள சுத்தி பாக்கலாம் வாங்க… !

இப்ப எல்லாம் டூர்னாலே பாரின் டூர் தான். ஆனால் நம்ம நாட்டிலேயே சுத்தி பாக்க வேண்டிய ,அனுபவிக்க வேண்டிய இடங்கள் ஏராளம்.

வெளிநாட்டுக்கு போயிட்டு வர்ற செலவ விட கம்மி தான். அப்புறம் என்ன… கொஞ்சம் காசும், விடுமுறை நாட்களும் சேர்ந்து வந்தா இந்தியா டூர் போயிட்டு வர வேண்டியது தான். இந்தியா முழுவதும் அழகிய மலைத்தொடர்களும், நீர்வீழ்ச்சிகளும், பள்ளத்தாக்குகளும், பாரம்பரிய நினைவுச்சின்னங்களும், கோவில்களும்.

கோட்டைகளும், கடற்கரை நகரங்களும், தீவுகளும் அதிகம். மொத்தமாக சுமார் 9000 அதிகமான சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இந்தியாவை சுற்றி பாகிஸ்தான், நேபாளம், சீனா, பூட்டான், மியான்மர், வங்கதேசம் எல்லைகளில் இருந்து வருகின்றன. எல்லையிலா? அச்சச்சோ ஆபத்தாச்சே படை இருக்குமே என அச்சப்பட தேவையில்லை. எல்லையோரத்திலும் அழகிய சுற்றுலா தலங்கள் நிறைந்துள்ளன.

வாகா எல்லை, பஞ்சாப்

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சாலையில் வாகா எல்லை அமைந்துள்ளது. இது பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 29 கிமீ தொலைவிலும், இந்தியாவின் அமிர்தசரஸிலிருந்து 27 கிமீ தொலைவிலும் உள்ளது. அட்டாரி-வாகா எல்லையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக இரு நாடுகளின் கொடிகளை இறக்கும் தினசரி விழா நடைபெறும்.இதனை காண தினமுமே மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

தர்ச்சுலா, உத்தரகாண்ட்

இந்தோ-நேபாள எல்லையில் அமைந்துள்ள இந்த அழகான நகரம், பனி மூடிய பஞ்சுலி சிகரங்களால் சூழப்பட்டுள்ளது. தார்ச்சுலா காளி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் வழியாக நேபாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் அமைந்துள்ள நன்னீர் ஏரியான மானசரோவர் ஏரியைச் சுற்றி பல அழகிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

காஞ்சன்ஜங்கா, டார்ஜிலிங்

உலகின் 3வது உயரமான மலையான காஞ்சன்ஜங்காவை இந்திய நிலபரப்பில் இருந்து ரசிக்கலாம். பூடான், சீனா, இந்தியா மற்றும் நேபாளம் நாடுகளால் பகிர்ந்து கொள்ளப்படும் காஞ்சன்ஜங்கா நிலப்பரப்பு, டார்ஜிலிங்கின் மலைப்பகுதியிலிருந்து காஞ்சஞ்சங்கா மலை உச்சியின் புகழ்பெற்ற காட்சிகளை காணலாம்.

பாங்காங் ஏரி, லடாக்

பாங்காங் ஏரி இந்தியாவின் மிக அழகான ஏரிகளில் ஒன்று. இது இந்தியா மற்றும் சீனாவின் எல்லைக்கு இடையில் அமைந்துள்ளது, இது கட்டுப்பாட்டுக் கோடு வழியாக செல்வதால் இது பாதுகாக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக உள்ளது. பல புலம்பெயர்ந்த பறவைகள் உட்பட

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *