தெலுங்கானா மாநிலத்தில் மார்ச்.25 ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!
தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை ஆனது பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பு குறித்த உத்தரவுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஹோலிப்பண்டிகைக்கு தெலுங்கானா அரசு விடுமுறை அளித்துள்ளது. வரும் மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தெலுங்கானா மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு செல்லுபடி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர மார்ச் 29 புனித வெள்ளி அன்று பொது விடுமுறை நாளாகவும், ஹஜ்ரத் அலியின் பிறந்த நாள் மார்ச் 31ஆம் தேதி விருப்ப விடுமுறை நாளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் இறுதி தேர்வுக்கு மிகவும் தீவிரமாக தயாராக தொடங்கியுள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.