மூடப்படும் பாடசாலைகள்… பிரித்தானியாவில் புதிதாக அம்பர் வானிலை எச்சரிக்கை

கடும் பனிப்பொழிவு காரணமாக பிரித்தானியாவில் மீண்டும் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலைகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அம்பர் வானிலை எச்சரிக்கை

பிரித்தானியாவில் மஞ்சள் மற்றும் அம்பர் வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் இருப்பதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று காலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய ஸ்கொட்லாந்தின் Glen Ogle பகுதியில் வெப்பநிலை உடல் உறையும் அளவுக்கு -13C என பதிவாகியுள்ளது. இந்த குளிர்காலத்தில் மிகவும் குளிரான இரவாக இது பதிவாகியுள்ளது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Altnaharra பகுதியில் -12.5C என பதிவாகியிருந்தது.

தற்போது பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதியில் மஞ்சள் மற்றும் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் போன்ற நிலைமைகள் மின் தடை மற்றும் வேறு பல சேவைகளை முடக்கும் நிலை ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

100க்கும் மேற்பட்ட பாடசாலைகள்

மட்டுமின்றி, பயண இடையூறும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ரயில் மற்றும் விமான சேவைகள் தாமதமாகலாம் அல்லது ரத்து செய்யப்படாலம் என்றும் எச்சரித்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *