சுழற்பந்துவீச்சு ஆடுகளம்னா கதறல்.. வேகப்பந்துவீச்சு ஆடுகளம்னா திறமை வேண்டுமா? ICCயின் கேவலமான பாலிசி
கேப் டவுன் : இந்தியா தென்னாபிரிக்கா அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 90ஸ் கிட்ஸ்கள் தங்களுடைய குழந்தைப் பருவத்தில் பல டெஸ்ட் போட்டிகள் வெற்றியும் தோல்வியும் இல்லாமல் டிராவில் முடிவடைந்தது தான் பார்த்திருப்போம்.
இதற்கு காரணம் பேட்ஸ்மேன்களின் அபார திறமை மற்றும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டது போன்ற பல காரணங்களால் தான். அப்போது எல்லாம் ஐந்து நாட்கள் பத்துவதில்லை என்று நாம் பேசி வந்தோம்.
இந்த நிலையில், தற்போது டெஸ்ட் கிரிக்கெட் மூன்று நாட்கள் இரண்டு நாட்களுக்குள்ளே முடிவடையும் கலாச்சாரம் பெருகி வருகிறது. இதற்கு ஆடுகளத்தின் தன்மை தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலகம் முழுக்க, போட்டியை நடத்தும் நாடு தங்களுடைய அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தங்களுக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக ஆசிய ஆடுகளங்களில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் எல்லாம் வந்தால் ஆசிய நாடுகள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரித்து போங்காட்டம் ஆடுகிறது என்று குற்றச்சாட்டுகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் தயாரிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் ஐசிசி சேர்ந்த நிர்வாகிகளும் பலர் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.
ஆனால் இந்தியா போன்ற ஆசிய நாடுகள் வெளிநாட்டுக்கு சென்றால் பந்து தலைக்கு மேல் போகும் அளவுக்கு ஆடுகளத்தை அபாயகரமாக தயாரிக்கிறார்கள். இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் முதல் நாளிலே 23 விக்கெட்டுகள் விழுந்தது. ரபடா வீசிய பந்து ஒன்று ரோஹித்தின் தலைக்கு மேல் போகிறிருக்கும் என ஹாக் ஐ(Hawk eye) காட்டுகிறது.
இதனால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்றால் ஒரு நியாயம்?
இந்தியா தயாரிக்கும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்றால் வேறு ஒரு நியாயம் என்ற அளவில் ஐசிசி நடந்து கொள்வதாக இந்திய ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பேட்டியில் பேசிய ரோஹித் சர்மாவே, இனி இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆடுகளம் குறித்து யாருமே வாய் திறக்க கூடாது என்று கடுமையாக பேசியிருக்கிறார்.அந்த அளவுக்கு இந்திய வீரர்களுக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே வேகப்பந்து வீச்சு ஆடுகளங்கள் தயாரிக்கப்படுகிறது.