சிவகார்த்திகேயனும் ஆர்த்தியும் சின்ன வயசுல எப்படி இருக்காங்கன்னு பாருங்க… இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படம்
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்தியின் சின்ன வயது புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகர் சிவகார்த்திகேயன்
தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர் சிவகார்த்திகேயன்.
தமிழ் சினிமா துறையில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தவர் இவர். குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் தனது கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
பின்னர் மிமிக்ரி போன்ற தனித்திறமை கொண்டு மேடை நகைச்சுவையாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர். படிப்படியாக படத்தில் நடித்து தற்போது ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கின்றார்.
இவருக்கும் இவரது சொந்தக்கார பெண்ணான ஆர்த்திக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவருக்கும் 2 குழந்தைகள் இருக்கின்றனர்.
இவர் சொந்தத்தில் திருமணம் செய்ததால் மனைவியுடன் இவர் சிறுவயதில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது காட்டு தீ போல் பரவி வருகின்றது.