இந்த மாதிரி படங்களை பார்க்கும் போது கோபமாக வருகிறது.. ராதிகா சொன்னது எந்த படத்தை?

நடிகை ராதிகா இந்த மாதிரி படங்களை பார்க்கும்போது தனக்கு கோபமாக வருகிறது என்று குறிப்பிட்டுள்ளதை அடுத்து அது எந்த படமாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களுடைய யூகங்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் ராதிகா என்பதும் தற்போது கூட அவர் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா அவ்வப்போது போல்டான கருத்துக்களை பதிவு செய்வார் என்பதும் அவரது கருத்துக்கு அமோக ஆதரவு கிடைக்கும் என்று குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் ‘எந்த படத்தையாவது பார்த்தால் கிரிஞ்ச்சா இருக்கிறது என்று யாராவது நினைத்தது உண்டா? ஆனால் இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆத்திரமாக வந்தது’ என்று குறிப்பிட்டார்.இதனை அடுத்து சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான ‘அனிமல்’ படத்தை தான் ராதிகா சொல்வதாக நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர், ஒரு சிலர் அவர் நடித்த படத்தை அவர் கூறியிருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர். ராதிகா எந்த படத்தை கூறி இருப்பார் என நீங்கள் யூகிக்கின்றீர்கள், அதை கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யுங்கள்.