நாளை மறுநாள் பிரச்சாரத்தை தொடங்குகிறார் சீமான்..!

பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தலில் அந்த சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கவில்லை.

கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு வருகிற 26-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.இதற்கிடையே நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

இருப்பினும் வருகிற 26-ம் தேதி நடைபெற உள்ள வழக்கு விசாரணையின்போது கரும்பு விவசாயி சின்னத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று அக்கட்சியினர் நம்புகிறார்கள். எந்த சின்னத்தில் போட்டியிடுவது? என்று இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சின்னத்தை கூறி ஓட்டு கேட்க முடியாத நிலையில் உள்ளனர்.

இருப்பினும் வரும் 26-ம் தேதி சின்னம் விவகாரத்தில் முடிவு எட்டப்பட வாய்ப்பு இருப்பதாக கட்சியினர் கூறியுள்ளனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 27-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் சீமான் பொதுக்கூட்டங்களில் மட்டுமே பேசி பிரச்சாரம் செய்வது வழக்கம். இந்த முறையும் அதே பாணியில் சீமான் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *