சுவிட்சர்லாந்தில் செல்பி மோகத்தால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை…
சுவிட்சர்லாந்தில் செல்பி எடுக்கும் ஆசையில் மலையிலிருந்து 20 மீற்றர் பள்ளத்தில் விழுந்தார் ஒரு பெண்.
செல்பி மோகத்தால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்திலுள்ள Berneuse மலைக்கு, தோழிகள் இருவர் சென்றிருந்திருக்கிறார்கள். அப்போது, பிரம்மாண்ட பின்னணியில் செல்பி எடுக்கவேண்டும் என்ற ஆசை ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது.
செல்பி எடுக்கும் முயற்சியில் அவர் எதிர்பாராதவிதமாக 20 மீற்றர் பள்ளத்தில் விழுந்திருக்கிறார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில், அவரது தோழியும் பள்ளம் ஒன்றில் சிக்கிக்கொண்டுள்ளார்.
பின்னர் அவர்கள் இருவரையும் மீட்க ஹெலிகொப்டரைக் கொண்டுவரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 20 மீற்றர் பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.