தேங்காய் கிலோ ரூ.14 க்கு விற்பனை – வேதனையில் விவசாயிகள்!
தமிழகத்தில் கடந்த ஆண்டு தேங்காய் ஒரு டன் ரூ.30 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால் நடப்பாண்டு தேங்காய் அதிகமான வரத்து உள்ள போதிலும் போதிய விற்பனை இல்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தின் கம்பம் பகுதியில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் மட்டும் 18,000 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது.தேங்காய் ஒரு டன்னின் விலை தற்போது ₹26000 முதல் ரூ.27,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் போதிய வருவாய் இல்லை என்றும் உரம் வாங்குவதற்கு கூட முடியவில்லை என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிலோ 35 ரூபாய்க்கு விற்ற நிலையில் இப்போது 14 ரூபாய்க்கு வாங்குவதற்கு வியாபாரிகள் வருவதில்லை. இதனால் விவசாயிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
சபரிமலை சீசன் தொடங்கியவுடன் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டுவதற்கு தேங்காயை அதிகமாக வாங்கி செல்வார்கள் ஆகையால் ஐயப்பன் கோவில் சீசன் சமயங்களில் தேங்காயின் விலை உச்சத்தில் இருக்கும் ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக தேங்காய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.