செம லுக்.. டாடா மோட்டார்ஸின் புதிய கார்… அம்சங்கள் என்னென்ன தெரியுமா??

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024-ம் துவக்க நாளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது தனது புத்தம் புதிய டாடா கர்வ் (Tata Curvv) எஸ்யூவி-யை காட்சிப்படுத்தியுள்ளது. அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் Tata Curvv அதன் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் காட்சிப்படுத்தப்பட்டது.

முன்னதாக கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவின் போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் Curvv கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது நினைவிருக்கலாம். இந்நிலையில் இந்த நேர்த்தியான SUV அதன் தனித்துவமான coupe ஸ்டைலிங் மூலம் தனித்து நிற்கிறது மற்றும் காண்போரின் கண்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. இதுவே அறிமுகப்படுத்தப்படும் போது அதன் போட்டி வாகனங்களாக கருதப்படும் கிரெட்டா, செல்டோஸ், கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் போன்றவற்றிடமிருந்து Tata Curvv-ஐ கணிசமாக வித்தியாசப்படுத்தும் வகையில் இருக்கிறது.

டிசைனை பொறுத்தவரை வரவிருக்கும் டாடா கர்வ் மாடலின் கிரில் மற்றும் சர்ஃபேஸ் விவரங்கள் ஹாரியரை நினைவூட்டுகின்றன. அதே சமயம் நெக்ஸான் மாடலை பிரதிபலிக்கும் sequential turn signals போன்ற அம்சங்களுடன், கர்வ்வ் டாடா வழங்கும் சிறந்த வாகனமாக இருக்கும். இதனிடையே Tata Curvv-ன் சமீபத்திய காப்புரிமை இமேஜ்கள் அதன் இறுதி டிசைனை வெளிப்படுத்துகின்றனர்.

இது கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் சிறிய மாற்றங்களுடன் காட்டப்பட்டதை ஒப்பிடும்போது பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் இருக்கிறது. நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டை நினைவூட்டும் வகையில் எக்ஸ்டன்ட் செய்யப்பட்ட எல்இடி லைட் பார், பியானோ பிளாக் மற்றும் பாடி கலர் ஃபினிஷ் கலவையுடன் ரீடிசைன் செய்யப்பட்ட கிரில் மற்றும் ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்களைப் போலவே புதுப்பிக்கப்பட்ட ஃப்ரன்ட் &பேக் பம்ப்பர்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்க அப்டேட்ஸ்களில் அடங்கும்.

தனது மாடல்களில் முதன்முதலாக ஃப்ளஷ் டோர் ஹேண்டில்ஸ் போன்ற புதுமையான அம்சங்களையும் Curvv மூலம் டாடா அறிமுகப்படுத்துகிறது.Curvv EV-ல் தொடங்கி பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை Curvv மாடல் வழங்கும். இதன் EV வேரியன்ட் மட்டுமின்றி டீசல் மற்றும் பெட்ரோல் வெர்ஷன்களை வெளியிடவும் டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நெக்ஸானின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படும் டீசல் வேரியன்ட் முதலில் சந்தைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கண்களை கவரும் டிசைன் மற்றும் பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் டாடாவின் Curvv இந்திய SUV மார்க்கெட்டில் போட்டி அலைகளை உருவாக்க தயாராக உள்ளது. வரவிருக்கும் Curvv ஆனது அதன் டாப்-என்ட் மாடலில் 360 டிகிரி கேமரா மற்றும் 18 இன்ச் அலாய் வீல்களுடன் கூடிய ஃபுல் LED லைட் செட்டப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸின் ரஞ்சன்கான் ஆலையில் கர்வ்வ் EV-யின் உற்பத்தி வரும் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *