செம ட்விஸ்ட்.. டெஸ்ட் அணியில் அக்சர்.. எஸ்கேப் ஆன அஸ்வின்.. வாய்ப்பை இழக்கப் போவது இவர்தான்
மும்பை : இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பின் சுழற் பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இவர் பேட்டிங்கிலும் கை கொடுப்பார் என்பதால் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
இவருடன் டெஸ்ட் அணியின் முக்கியமான மூன்று சுழற் பந்துவீச்சாளர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்த நால்வரில் மூன்று பேர் மட்டுமே போட்டிகளில் களமிறங்குவார்கள் எனும் நிலையில் வாய்ப்பை இழக்கப் போகும் அந்த ஒருவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் இந்திய மண்ணில் நடைபெறும் நிலையில் ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் எப்படியும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் பயன்படுத்தும்.