சென்பகமே.. சென்பகமே..” பால் பண்ணை நடத்தும் Ex அமைச்சர்! எல்லா கட்சிகளிலும் ஒரு ரவுண்டு வந்தாச்சு
தருமபுரி: திமுக, தேமுதிக, அதிமுக என வரிசையாக எல்லா கட்சிகளிலும் ஒரு ரவுண்டு வந்து விட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், இப்போது விவசாயத்துடன் கூடிய பால் பண்ணைத் தொழிலை கவனித்து வருகிறார்.
தருமபுரி மாவட்ட திமுகவின் முகமாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் முல்லைவேந்தன். கடந்ட 1996-2001 திமுக ஆட்சிக்காலத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்தவர். 1989, 1996, 2006 என முன்று முறை திமுக எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக அடைந்த தோல்வி குறித்து கட்சி மேலிடத்தால் விளக்கம் கேட்கப்பட்டது.
அப்போது முல்லைவேந்தன் முறையாக அதற்கு விளக்கம் அளிக்கவில்லை என்பதால் அவரை திமுகவிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தார் ஸ்டாலின். அதைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு தேமுதிகவில் இணைந்த முல்லைவேந்தனுக்கு கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை வழங்கினார் விஜயகாந்த். மூன்று ஆண்டுகள் மட்டும் அந்தக் கட்சியில் இருந்தவர், கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை மீண்டும் திமுகவில் இணைத்துக் கொண்டார்.
மூன்று வருடங்கள் கூட முழுமையாக கழியாத நிலையில் ஸ்டாலினிடம் கோபித்துக்கொண்டு அதிமுகவில் ஐக்கியமானார். ஆனாலும் முன்பு போல் ஆக்டிவ் பாலிடிக்ஸில் ஈடுபடுவதை குறைத்துக்கொண்டு, விவசாயம், பால் பண்ணை என கவனம்