சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு; வங்கி பங்குகள் நிலை என்ன?
இந்திய முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி திங்கள்கிழமை (ஜன.8,2024) மந்தமான வணிக புதுப்பிப்புகள், பலவீனமான காலாண்டு முடிவுகள் காரணமாக கடுமையாக வீழ்ச்சியடைந்தன.
சென்செக்ஸ் 671 புள்ளிகள் சரிந்து 71,355.22 ஆகவும், நிஃப்டி 0.9% குறைந்து 21,513 ஆகவும் முடிந்தது. ஊடகங்களைத் தவிர பெரும்பாலான துறைசார் குறியீடுகள், வங்கிகள் மற்றும் எஃப்எம்சிஜி ஆகியவை மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தன. மிட்கேப்கள் மற்றும் ஸ்மால்கேப்களும் அளவுகோல்களை விட இழப்புகளுடன் முடிந்தது.
இதற்கிடையில், டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் (Infosys) போன்ற முக்கிய ஐ.டி நிறுவனங்களின் வரவிருக்கும் காலாண்டு வருவாய் மற்றும் உலகளாவிய சந்தைப் போக்குகள் ஆகியவற்றால் சந்தைகள் கணிசமாக பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
டிசம்பரில் இந்தியாவின் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான வரத்து அதிகரித்தது. மியூச்சுவல் ஃபண்ட் வரவு கடந்த மாதம் 169.97 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
கேமிங் துறையில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சீன அரசாங்கத்தின் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்ற அச்சத்தை தொடர்ந்து சீனா உள்பட ஆசிய பங்குகள் சரிந்தன.
அந்த வகையில், ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு மற்றும் ஆஸ்திரேலியாவின் எஸ்&பி/ஏஎஸ்எக்ஸ் 200 குறியீடு இன்று சரிந்தன. ஜப்பானிய சந்தைகள் இன்று மூடப்பட்டிருந்தன.