திருமண போட்டோ டெலிட் செய்த சீரியல் நடிகை.. அதற்குள் விவாகரத்தா? குழப்பத்தில் ரசிகர்கள்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. இவர் 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ரோஜா சீரியலில் நடித்து இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்தார். இவர் கடந்தாண்டு தனது காதலரை திருமணம் செய்துக்கொண்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த நிலையில், திருமணமான ஒரே வருடத்திலேயே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமண புகைப்படத்தை டெலிட் செய்து ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா என்ற ஹிட் சீரியலில் நடித்து புகழ்பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தார். இந்த சீரியலில் இவர் நடித்த ரோஜா கதாபாத்திரம் இவரின் அடையாளமாகவும் மாறியது. இந்த சீரியல் சன் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பானது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த சிப்பு சூர்யன், பிரியங்கா நல்காரி இடையேயான காதலை பார்க்கவே தனிக்கூட்டம் இருந்தது.

நடிகை பிரியங்கா நல்காரி: இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஆனாலும் ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரியங்கா, கடந்த ஆண்டு மார்ச் மாதம் மலேசியாவில் உள்ள ஒரு கோவிலில், பிரியங்கா தனது காதலவர் தொழிலதிபர் ராகுல் வர்மாவை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

காதல் திருமணம்: திருமணத்திற்கு பின் மலேசியாவில் குடியேறிய பிரியங்கா, இனி சீரியலில் நடிக்க மாட்டார் என்று தகவல் வெளியானது. ஆனால், திடீரென மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நள தமயந்தி என்ற தமிழ் சீரியலின் மூலம் பிரியங்கா மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கினார். அதே சமயம் பிரியங்கா தனது கணவருடன் சேர்ந்து புது ஓட்டல் ஒன்றை கடந்த ஆண்டு தொடங்கினார். அந்த புகைப்படங்களை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

திருமண போட்டோக்கள் டெலிட்: சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா, அவ்வப்போது தனது கணவருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை அப்லோடு செய்வதை வழக்கமாக வைத்து இருந்தார். இந்நிலையில், தற்போது பிரியங்கா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார். இதனால் பிரியங்கா தனது திருமணத்தை முறித்துக்கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கணவரை பிரிந்தாரா: மேலும், அண்மையில் நேரலையில் பேசிய பிரியங்காவிடம் ரசிகர் ஒருவர், நீங்கள் சிங்கிளா என்று கேட்டபோது, அதற்கு ஆம் என்று பதில் அளித்துள்ளார். இதன் மூலம் பிரியங்கா தனது கணவரை பிரிந்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருமணமாகி ஒரே வருடத்திற்குள் இப்படியா என இணையத்தில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *