ஜேர்மனியில் நிலவும் கடுமையான மருத்துவர்கள் பற்றாக்குறை: காரணங்கள்…
ஜேர்மனியில் மருத்துவர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், பணிச்சூழல் மோசமாக உள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் வேலைநிறுத்தத்தில் இறங்க, டிசம்பர் மாதம், பல கிளினிக்குகள் மூடப்பட்டன.
ஜேர்மனியில் நிலவும் கடுமையான மருத்துவர்கள் பற்றாக்குறை
ஜேர்மனியில் பனி புரியும் மருத்துவர்களில் சுமார் 80,000 பேர் 60 வயதைக் கடந்தவர்கள். அவர்களில் பலர் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், தங்கள் இடத்தில் பணியாற்ற வருவதற்கு மருத்துவர்கள் இல்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
கடந்த ஆண்டு இப்படி ஓய்வு பெற்றவர்களின் இடத்தை நிரப்ப மருத்துவர்கள் கிடைக்காததால், சுமார் 150 தனியார் கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட சுழலில், அடுத்த மூன்று ஆண்டுகளில் மருத்துவர்கள் பணி ஓய்வு பெற உள்ளது முதலான பல்வேறு காரணங்களால், சுமார் 5,000 முதல் 8,000 தனியார் கிளினிக்குகள் வரை மூடப்பட உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
காரணங்கள்…
மருத்துவர் பற்றாக்குறைக்கு, குறைந்த ஊதியமும் ஒரு காரணம் என்கிறார்கள் சில மருத்துவர்கள். தங்கள் மருத்துவ உதவியாளர்களுக்கு ஊதியம் வழங்கவும், மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் தங்களுக்குக் கிடைக்கும் வருவாயிலிருந்துதான் செலவு செய்யவேண்டியுள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.
மேலும், ஜேர்மனியில் பணிச்சூழல் மோசமாக உள்ளதாகவும், அதனால் பல மருத்துவ மாணவர்கள் டென்மார்க், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பணி செய்ய சென்றுவிடுவதாகவும், அதற்குக் காரணம், அங்கு பணிச்சூழல் நன்றாக உள்ளதுடன், குறைந்த நேரப் பணியும் அதிக வருவாய் கிடைப்பதும்தான் என்கிறார்கள் சிலர்.