“Fast Five” படப்பிடிப்பில் பாலியல் அத்துமீறல்; வின் டீசல் மீது புகார்
“ஃபாஸ்ட் ஃபைவ்” படப்பிடிப்பின் போது ஹாலிவுட்டின் நட்சத்திர நடிகரான வின் டீசல், தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவரது முன்னாள் உதவியாளர் புகார் தெரிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு ஜார்ஜியாவின் அட்லாண்டா நகரில் 12 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பிரபலமான “ஃபாஸ்ட் ஃபைவ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, தயாரிப்பு நிறுவனம் சார்பில், வின் டீசலுக்கு உதவியாளராக அஸ்டா ஜோனாசன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அப்போது தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் வின் டீசல் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அஸ்டா ஜோனாசன் குற்றஞ்சாட்டியிள்ளார்.
வின் டீசலிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தனது வழக்கில் அஸ்டா ஜோனாசன் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே, ஃபாஸ்ட் ஃபைவ் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறி வின் டீசலின் சகோதரி சமந்தா வின்செட் தன்னை பணிநீக்கம் செய்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சகோதரி சமந்தா வின்செட்டுடன், வின் டீசல்
12 ஆண்டுகளுக்கு பிறகு கலிஃபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள அஸ்டா ஜோனாசன், தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரி உள்ளார்.