அடிசக்க! அடுத்தடுத்து சென்னை-க்கு ஜாக்பாட்.. GCC-களின் கூடாரமாக மாறுகிறதா..?

சென்னை மற்றும் தமிழ்நாடு தற்போது சர்வதேச நிறுவனங்களின் முக்கிய டார்கெட் ஆக மாறியுள்ளது மட்டும் அல்லாமல் ஏற்கனவே தமிழ்நாட்டில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் வேகமாக விரிவாக்கம் செய்யும் பணியிலும் இறங்கியுள்ளது.
இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் அலுவலகத்தை அமைக்கப் பல காரணங்கள் இருந்தாலும், இதன் மூலம் மக்களுக்கு அதிகப்படியான பலன்கள் உண்டு. இந்த வகையில் தற்போது சென்னையில் போரூர் DLF-ல் இருக்கும் போயிங் நிறுவனத்தின் குளோபல் இன்ஜினியரிங் ஹப்-ஐ விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது. விமானத் தயாரிப்பில் கொடிகட்டிப் பறக்கும் அமெரிக்க நிறுவனமான போயிங் தனது விமானங்களை மேம்பட்ட தரத்தில் தயாரிக்கும் முயற்சியில் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் அலுவலகங்களை அமைத்து இயங்கி வரும் வேளையில் சென்னையில் இருக்கும் போயிங் நிறுவனத்தின் குளோபல் இன்ஜினியரிங் ஹப் மிகவும் முக்கியமானதாகும். தற்போது சென்னையில் இருக்கும் போயிங் அலுவலகத்தில் அந்நிறுவனம் கூடுதலாக 300 கோடி ரூபாய் முதலீடு செய்து 1100 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க உள்ளது. இதன் மூலம் சென்னை போயிங் அலுவலகத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 1900 ஆக உயர உள்ளது. கடந்த வாரம் உலகின் மிகப்பெரிய ஷூ மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆடைகள் மற்றும் பொருட்களைத் தயாரிக்கும் அடிடாஸ் சீனாவுக்கு அடுத்தபடியாகச் சென்னையில் தனது மிகப்பெரிய அலுவலகத்தைத் திறந்தது. இந்த அலுவலகம் மூலம் தற்போது தமிழ்நாட்டில் பெரம்பலூர் பகுதியில் தயாரிக்கப்படும் ஷூ-க்களின் டிசைன், தரத்தைக் கண்காணிப்பது உடன் அதன் சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்த உள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹெல்த்கேர் டெக்னாலஜி நிறுவனமான MedExpert இந்தியாவில் முதல் முறையாகச் சென்னையில் தனது அலுலவகத்தைத் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது. எமர்ஜென்சி மெடிக்கல் சேவைகளில் பில்லிங் சேவை அளிக்கும் MedExpert சென்னையில் தனது Global Capability Center (GCC) அமைக்க உள்ளது. ஜிசிசி-களை ஈர்க்கும் போட்டி தற்போது நாட்டின் அனைத்து மாநிலத்திலும் அதிகரித்துள்ளது. 2023 பொறுத்த வரையில் அதிகளவிலான GCC-களை ஈர்த்த பெருமையை ஹைதராபாத் பெற்றுள்ளது. 2024 ஆம் ஆண்டில் இந்தப் பெருமையைத் தமிழ்நாடு பெற வேண்டும் என்பதை முக்கிய டார்கெட்டாகக் கொண்டுள்ளது, இதன் துவக்கமே அட்டகாசமாக உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *