சனி பெயர்ச்சி பலன்.. எதிரிகள் தொல்லை இனி இல்லை.. 2024ல் தொட்டதெல்லாம் பொன்.. பொற்காலம் யாருக்கு?
சென்னை: கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் ஆறாம் வீட்டில் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் 2024ஆம் ஆண்டு முழுவதும் எதிரிகளின் தொல்லை ஒழியும். காணும் இடமெங்கும் எதிரிகளே இல்லை என்று வெற்றி முரசு கொட்டப்போகிறீர்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு தொழில், வியாபாரம், வருமானம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
கன்னி: சனிபகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து பயணம் செய்யும் சனி பகவான், விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் இடம், ஆயுள் ஸ்தானமான 8ஆம் இடம், மற்றும் உங்கள் ராசிக்கு 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தையும் சனிபகவான் பார்வையிடுகிறார்.
பயமில்லை இனி ஜெயம்: கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் தொட்டதெல்லாம் ஜெயமே. தடைபட்ட காரியங்கள் எளிதில் கைகூடும். உங்களின் வாழ்க்கையில் வெற்றிக்கனியை ருசிக்கப் போகிறீர்கள். சோதனைகளை தாங்கிக் கொண்டு வைரம் பாய்ந்த மனதுடையவராக மாறியிருக்கிறீர்கள். எதிர்மறையான சிந்தனைகள் நீங்கி நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும்.
பண வருமானம்: உங்களின் பொருளாதார நிலைமை உயரும். வியாபாரிகளுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். தொழில் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன்கள் அதிகரிக்கும், எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களுக்கு பிறகு கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலைமை சீராகும்.
தொட்டது வெற்றி: கைக்கு வராமல் இருந்த பணமெல்லாம் தேடி வரும். சமுதாயத்தில் கவுரவம், புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும். பெண்களுக்கு நகை, ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் முன்னோர்கள் சொத்து மூலம் எதிர்பாராத தனவரவு பொருள் வரவு அமையும். பௌர்ணமி நாளில் சந்திர தரிசனம் செய்யுங்கள். இனி தொட்டதெல்லாம் ஜெயமே. தடைபட்ட காரியங்கள் எளிதில் கைகூடும்.