சனி வக்ர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்
சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2024: ஜோதிட சாஸ்திரப்படி, சனி கிரகம் அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகமாகும், ஏனெனில் அது ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருந்து அதன் பிறகுதான் அது மற்றொரு ராசிக்கு மாறுகிறது. அதுமட்டுமின்றி சனி அவ்வப்போது தன் நிலையை மாற்றிக் கொண்டே தான் இருக்கும். அதேபோல் சனியின் நட்சத்திர பெயர்ச்சி அல்லது சனியின் உதயம் மற்றும் அஸ்தமனம் மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் சனி அதன் அசல் முக்கோண ராசியான கும்பத்தில் அஸ்தமித்துள்ளது. வருகிற மார்ச் 18ஆம் தேதி சனி உதயம் நடக்ககியுள்ளது. சனியின் உதயத்தால் அளவில்லா பலன் கிடைக்கும். இதைத் தொடர்ந்து, வருகிற ஜூன் 29 ஆம் தேதி சனி பின்னோக்கி நகரும். இதில் சனியில் வக்ர பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதிக்கும். சில ராசிக்காரர்களுக்கு தொல்லைகளும், அதேசமயம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலனையும் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், பண ரீதியாக லாபம் அதீத லாபம் கிடைக்கும். இந்நிலையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் மற்றும் சனியின் வக்ரத்தால் சாதகமான பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக செயல்பட்டு, பண வரவு உண்டாகும். முடிக்கவேண்டிய ஒப்பந்தங்கள் அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக முடிவடையும். குடும்ப வாழ்க்கையும் நன்றாகவும், சிறப்பாகவும் இருக்கும்.
ரிஷபம் (Taurus Zodiac Sign): சனியின் அருளால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் ஒரேடியாக நீங்கும். உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாவும், செழிப்புடனும் மற்றும் திருப்திகரமாகவும் இருக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். வருமானம் உயரும். மேல் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணத்தை சேமிக்க இதுவே சாதகமான நேரம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
துலாம் (Libra Zodiac Sign): துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் அருளால் மிகவும் நல்ல பலன்களைத் தருவார். நீங்கள் எந்த துறையில் வேலை செய்துக் கொண்டிருந்தாலும் அதில் பலன் அடைவீர்கள். கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறலாம். வியாபாரம் பெருகும். நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் முடிவடையும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் கிடைக்கும்.
தனுசு (Sagittarius Zodiac Sign): உத்தியோகத்தில் பிரச்சனைகளை மீண்டு தற்போது அமைதியான சூழலில் வேலை செய்வீர்கள். சனியின் அருளால் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை முத்தமிடும். கெட்டுப்போன வேலையும் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் அதிர்ஷ்டத்தின் மூடு ஆதரவை பெறுவீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். பெரிய கம்பெனியில் வேலை வாய்ப்பு கிடைக்கலாம். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.