Shanmuga Pandian: சர்ச்சை கதையில் விஜய்காந்த் மகன்; டைரக்ஷன் சாட்டையை சுழற்றும் சசி!
சகாப்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சண்முக பாண்டியன் தொடர்ந்து மதுர வீரன் படத்தில் நடித்தார். தற்போது அவர் மித்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமா மட்டுமல்லாது தமிழக அரசியலிலும் தன்னுடைய அடையாளத்தை மிக அழுத்தமாக பதிவு செய்தவர் நடிகர் விஜய்காந்த். இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 28ம் தேதி காலமானார்.
அவரது உடல் நேற்றைய தினம் கோயம் பேட்டில் உள்ள அவரது தேமுதிக அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்து விட்டது அவருக்கு பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ள நிலையில், பிரபாகரன் முழுக்க, முழுக்க அரசியலும், சண்முக பாண்டியன் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சகாப்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சண்முக பாண்டியன் தொடர்ந்து மதுர வீரன் படத்தில் நடித்தார். தற்போது அவர் மித்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குநர் சசிகுமார் குற்றபரம்பரை நாவலை வெப் தொடராக எடுக்க இருப்பதாகவும், அதில் கதாநாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேலராம மூர்த்தி எழுதிய இந்த நாவலை, முன்னதாக பாரதிராஜா படமாக எடுக்க இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து இயக்குநர் பாலா அதனை படமாக எடுக்க போவதாக தகவல் வெளியாக, பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் பாலா பத்திரிகையாளர்களை சந்தித்து எச்சரிக்கை விட, அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.